ஈதல் சகப்பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈதல் சகப்பிணைப்பு அல்லது அணைவு சகப்பிணைப்பு (Coordinate Covalent Bond) என்பது பிணைப்பில் ஈடுபடும் அணுக்களில் ஏதாவது ஒரு அணு மட்டுமே பிணைப்பிற்கான ஓர் இணை எதிர்மின்னிகளைத் தந்து ஏற்படுத்தப்படும் பிணைப்பு ஆகும். இது சகப்பிணைப்பின் ஒரு வகையாகும். பிணைப்பிற்கான ஓர் இணை எதிர்மின்னிகளை வழங்கும் அணுவானது கொடுக்கும் அணு (Donor Atom) எனவும், அவ்வாறு தரப்படும் எதிர்மின்னிகளை ஏற்கும் அணுவானது ஏற்பி அணு (Receptor Atom) எனவும் அழைக்கப்படுகின்றன.

உதாரணங்கள்[தொகு]

அமோனியா மற்றும் போரான் முப்புளோரைடு இணைந்து உருவாகும் கூட்டு விளைபொருள் உருவாகும் செயல்முறையானது ஈதல் சகப்பிணைப்பு உருவாதலை உள்ளடக்கியுள்ளது.

ஈதல் சகப்பிணைப்பில் பிணைப்பிற்காக வழங்கப்படும் ஒரு இணை எதிர்மின்னிகள் சில நேர்வுகளில் ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூற்றிற்குத் தருவதாக அமையும். உதாரணமாக, அமமோனியா மற்றும் போரான் முப்புளோரைடு ஆகியவற்றிற்கு இடையேயான பிணைப்பினைக் கருத்தில் கொள்ளும் போது, அம்மோனியா மூலக்கூறானது ஒரு இணை எதிர்மின்னிகளை போரான் முப்புளோரைடிற்கு வழங்குகிறது. போரான் முப்புளோரைடு ஒரு எலக்ட்ரான் குறை சேர்மமாக இருப்பதால் அதில் உள்ள வெற்றுக்கூடு அம்மோனியா மூலக்கூறால் வழங்கப்படும் ஒரு இணை எலக்ட்ரான் (அ) எதிர்மின்னிகளை வாங்கிக் கொள்கிறது. ஆகவே, ஈதல் சகப்பிணைப்பானது உருவாகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Coordinate Covalent Bond: Definition and Examples". Chemistry Learner (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதல்_சகப்பிணைப்பு&oldid=3110242" இலிருந்து மீள்விக்கப்பட்டது