இஸ்லாமில் அடிமைத்தனம்
Jump to navigation
Jump to search
இசுலாம் சமயத்தின் அன்றைய அரேபியர்களின் தாக்கத்தினால் அடிமைத்தனத்தை முற்காலத்தில் ஏற்றுக்கொண்டனர்.[1] முகமது நபியும் அவரோடு உடனிருந்தவர்களும் அடிமைகளை வாங்கினார்கள். சிலரை விடுதலையும் செய்தனர்.[1] 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லாமிய சிந்தனை அடிமைத்தனம் இஸ்லாமிற்கு உடன்படாத செயற்பாடு என திரும்பியது. சவூதி அரேபியாவின் en:Wahhabi இதை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒரு சுதந்திரமான மனிதனை அடிமையாக்க முடியாது என்பது அல்லாஹ்வின் கட்டளை ஆகும்.[2]
அடிமை பற்றி முகம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகள்[தொகு]
ஹதீஸ்[தொகு]
- ”மறுமை நாளில் மூவருக்கெதிராக நான் வழக்காடுவேன்’ என்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவன் என் பெயரால் சத்தியம் செய்து விட்டு அதில் மோசடி செய்தவன். இன்னொருவன், சுதந்திரமான ஒருவரை விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன். மூன்றாமவன் ஒரு கூலியாளிடம் வேலை வாங்கிக்கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன்.” (நபிமொழி புகாரி 2227)[3][4]