இவா பெரோன்
மரியா இவா துவார்டே டெ பெரோன் Eva Duarte de Perón | |
---|---|
அர்ச்சென்டினாவின் முதல் குடிமகள் | |
பதவியில் 4 சூன் 1946 – 26 சூலை 1952 | |
குடியரசுத் தலைவர் | யான் பெரோன் |
முன்னையவர் | கான்ரடா விக்டோரியா டோர்னி |
பின்னவர் | இல்லை |
அர்ச்சென்டினாவின் தொழிலாளர் அமைச்சகம் | |
பதவியில் 4 சூன் 1946 – 26 சூலை 1952 | |
குடியரசுத் தலைவர் | யான் பெரோன் |
முன்னையவர் | யான் பெரோன் |
பின்னவர் | ஜோசு மாரியா ஃப்ரீர் |
அர்ச்சென்டினாவின் சுகாதார அமைச்சகம் | |
பதவியில் 4 சூன் 1946 – 26 சூலை 1952 | |
குடியரசுத் தலைவர் | யான் பெரோன் |
மகளிர் பெரோனிச கட்சித் தலைவர் | |
பதவியில் 1947–1952 | |
முன்னையவர் | இல்லை |
பின்னவர் | டெலியா பரோடி |
இவா பெரோன் அறக்கட்டளை தலைவர் | |
பதவியில் 1948–1952 | |
குடியரசுத் தலைவர் | யான் பெரோன் |
முன்னையவர் | இல்லை |
பின்னவர் | யான் பெரோன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | லாஸ் டோல்டோசு, அர்ச்சென்டினா | 7 மே 1919
இறப்பு | 26 சூலை 1952 புவெனஸ் ஐரிஸ், அர்ச்சென்டினா | (அகவை 33)
தேசியம் | அர்ச்சென்டினர் |
அரசியல் கட்சி | நீதிக் கட்சி மகளிர் பெரோனிச கட்சி |
துணைவர் | யான் பெரோன் (1945–1952) |
வேலை | நடிகை வள்ளல் முதல் குடிமகள் அரசியல்வாதி |
கையெழுத்து | |
மரியா இவா துவார்டே டெ பெரோன் (María Eva Duarte de Perón)(எசுப்பானிய ஒலிப்பு: [maˈɾi.a ˈeβa ˈðwarte ðe peˈɾon]; 7 மே 1919 – 26 சூலை 1952) அர்ச்சென்டினாவின் அதிபர் யான் பெரோனின் இரண்டாவது மனைவியாகும். இவர் அர்ச்சென்டினாவின் அதிபர் மனைவி (முதல் குடிமகள்)யாக 1946ஆம் ஆண்டு முதல் தனது மரணம் வரை இருந்தவர். இவர் சுருக்கமாக இவா பெரோன் அல்லது இசுப்பானிய செல்லப்பெயராக எவிடா என்று அழைக்கப்பட்டார்.
1919ஆம் ஆண்டு அர்ச்சென்டினாவின் கிராம்பபுறத்தில் லோஸ் டோல்டோஸ் என்ற கிராமத்தில் திருமணம் புரியாத தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். தனது பதினைந்தாவது வயதில் 1934ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரான புவனெசு அயரிசில் நாடக,வானொலி மற்றும் திரைப்பட நடிகையாக பணிவாழ்வு தொடங்கினார். சனவரி 22,1944ஆம் ஆண்டு சான் யுவான் கநிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக புவெனசு அயரிசில் உள்ள லூனா பூங்கா அரங்கில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வொன்றில் கர்னல் யான் பெரோனை சந்தித்தார். காதல் வயப்பட்ட இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் புரிந்தனர். 1946ஆம் ஆண்டு யான் பெரோன் அர்ச்சென்டினாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவராண்ட ஆறு ஆண்டுகளில் இவா பெரோனின் தொழிலாளர் உரிமைகள் குறித்த பேச்சுக்களுக்காக அவரது செல்வாக்கு அர்ச்சென்டினாவின் பெரோனிச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் வளர்ந்தோங்கியது. தொழிலாளர் அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் பணி புரிந்தார். அர்ச்சென்டினப் பெண்களின் இடர்பாடுகளைக் களையும் விதமாக இவா பெரோன் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார்.நாட்டின் முதல் பெரியளவில் பெண்களுக்கான கட்சியாக மகளிர் பெரோனிசக் கட்சியை நிறுவி அதன் தலைவியாக இருந்தார்.
1951ஆம் ஆண்டு தன்னை கட்சி அர்ச்சென்டினாவின் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலுக்கு நியமனம் செய்யப்படுவதை ஏற்கவில்லை.அவருக்கு வறியவர்கள்,தொழிலாளர்கள் என, அர்ச்சென்டினாவின் சட்டை அணியாத மக்கள் என்று குறிப்பிடப்பட்ட மக்களின், ஆதரவு இருந்தது. இருப்பினும் அர்ச்சென்டினாவின் செல்வந்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பு,அவரது உடல்நலக்கேடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.1952ஆம் ஆண்டு தனது 33வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் ஆன்மீகத் தலைவர் என்று நாடாளுமன்றம் பட்டம் வழங்கியது.[1][2][3] அவர் ஓர் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவராக இல்லாதபோதும் அவரது மரணத்தின்போது தேசிய இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
இவா பெரோனின் தாக்கம் பன்னாட்டு பரப்பிசை பண்பாட்டில் எதிரொலித்தது,[4] அதனில் இசைத்தட்டு எவிட்டா மிகவும் தபுகழ்பெற்றது .[5] தற்கால அர்ச்சென்டினாவின் பெண் அரசியல்வாதிகள் இவா பெரோனின் தாக்கம் அரசியலில் இன்னும் இருப்பதாகவும் தங்களை உந்துவதாகவும் கூறுகின்றனர்.[6]
இவாவின் இளமை வாழ்க்கை
[தொகு]இவா தான் எழுதிய சுயவாழ்க்கை வரலாற்று நூலான இல இரசன் இடி மி விடா[7] என்னும் நூலில் கூட அவர் பிறப்பு பற்றிய குறிப்புகளோ பிறந்தநாள் இடம் பற்றிய குறிப்புகளோ இல்லை.[8] ஆனால் சட்டப்படி பிறப்புச் சான்றிதழில் இவரது பிறந்தநாள் 7 மே, 1922 என்று பதியப்பட்டுள்ளது.[9][10] கி. பி. 1945ஆம் ஆண்டில் தன் திருமணத்துக்காக போலித்தனமாகச் பிறப்புச் சான்றிதழைத் தயாரித்தார் எனவும் கூறப்படுகிறது.[11] தன் உண்மையான இளைய வாழ்க்கை வரலாற்றுக்கான பிறப்புச் சான்றிதழை இவர் அழிக்கவும் செய்திருக்கிறார்[11][12]
இவா பெரான் தன் இளமைப் பருவத்தை பியெனொசு ஏரசு மாகாணத்தில் இருந்தார். இவரின் பெற்றோர் பாசுக்கே இனத்தைச் சேர்ந்தவர்கள்.[13] இவரது குடும்பம் மிகவும் செல்வாக்கு வாய்ந்ததாகும்.[14]
விமர்சனங்களும் மரபுரிமைகளும்
[தொகு]மெக்மெனர்சு இவா பெரோனை மேரி மெக்தலீனுடன் தொடர்புப்படுத்துவார்.[15] வரலாற்றியலாளரான கூபர்டு கெரிங்கு என்பவர் இவா பெரோனை இலத்தீன் அமெரிக்காவில் பொதுமக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண் இவர் என்றும் கூறியுள்ளார்.[16][17]
இவா பெரோனின் இறந்த நாள் விடுமுறையாக இல்லாவிட்டாலும் அவரின் இறந்த நாள் ஒரு முக்கிய நாளாக அர்ஜென்டீனாகாரார்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உருவம் அர்ஜென்டினேய நாணயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயம் இவரின் பெயரால் எவிட்டாசு என்று அழைக்கபடுகின்றன.[18] சியூடாடு எவிட்டா (எவிட்டா நகரம்), இவா பெரோன் அறக்கட்டளையால் கி. பி. 1947ஆம் ஆண்டில் இவரின் பெயராலேயே நிறுவப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A nation seeks salvation in Evita By Scotsman.com: "On 26 July 1952, a hushed Argentina heard Eva Perón, the 'spiritual leader of the nation', had died, aged 33."
- ↑ Fraser & Navarro (1996:158). "As Evita's health continued to deteriorate that month, the city of Quilmes resolved to change its name to 'Eva Perón,' and Congress, after a special legislative session, devoted to eulogies of 'the most remarkable woman of any historical epoch', gave her the title Jefe Espiritual de la Nacion (Spiritual Leader of the Nation)."
- ↑ Crassweller (1987:245). "A week later, on her thirty-third birthday, she received from Congress the title of Spiritual Leader of the Nation."
- ↑ Fraser & Navarro (1996).
- ↑ Brantley, Ben. In London, a Pious 'Evita' for a Star-Struck Age. New York Times: 3 July 2006. http://www.nytimes.com/2006/07/03/theater/03evit.html?_r=1&scp=129&sq=eva%20peron&st=cse
- ↑ "Time Magazine. Interview: Cristina Fernandez de Kirchner of Argentina". Archived from the original on 2013-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-12-24.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Published in Argentina in 1952; subsequently published in English-speaking countries under the titles My Mission in Life and Evita by Evita
- ↑ Perón (1952).
- ↑ Fraser & Navarro (1996:2–3).
- ↑ Act 495, from the Church "Capellanía Vicaria de Nuestra Señora del Pilar" registry of Baptisms for the year 1919, baptism took place on 21 November 1919
- ↑ 11.0 11.1 Borroni & Vacca (1970).
- ↑ Fraser & Navarro (1996:4).
- ↑ "Remembering Evita. :: Americas :: April 2008 – Britannica Online Encyclopedia". Britannica.com. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
- ↑ Fraser & Navarro (1996:3).
- ↑ McManners (2001:440).
- ↑ Adams (1993:203).
- ↑ "Evita Or Madonna: Whom Will History Remember?" Interview with Tomas Eloy Martinez". Archived from the original on 4 மே 2001. பார்க்கப்பட்ட நாள் 9 November 2009.
- ↑ "Argentines swap pesos for 'Evitas'", BBC. Retrieved 4 October 2006.
வெளியிணைப்புகள்
[தொகு]- Eva Perón Historical Foundation
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Eva Perón
- Eva Perón's Gravesite
- casahistoria pages on Perón Les Fearns site, also links to Eva Perón pages