இவான் யார்கோவ்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இவான் யார்கோவ்சுகி

இவான் ஒசிபோவிச் யார்கோவ்சுகி (Ivan Osipovich Yarkovsky, போலியம்: Jan Jarkowski, 24 மே 1844 – 22 சனவரி 1902, ஐடெல்பர்கு) ஒரு போலந்துக் கால்வழி உருசியக் குடிமைப் பொறியியலாளர் ஆவார். இவர் உருசியத் தொடர்வண்டிக் குழுமத்தில் பணிபுரிந்தார். இவர் தனது காலத்தில் எவராலும் அவ்வளவாக அறியப்படவில்லை. இவரது இறப்புக்கு நெடுநாட்களுக்குப் பின்னர், 1970 இல் தொடங்கி, சூரியக் குடும்பத்தின் சிறுபொருட்கள்பால் வெப்பக் கதிர்வீச்சின் விளைவுகள் (காட்டாக, சிறுகோள்கள்) எனும் இவரது ஆய்வு யார்கோவ்சுகி விளைவாகவும், யார்கோவ்சுகி-ஓகீப்பே-இராத்சியெவ்சுகி-படாக் சுருக்கமாக, யார்ப் விளைவாகவும் வளர்த்தெடுக்கப்பட்டது. சிறுகோள் 35334 யார்கோவ்சுகி இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது . இவர் 1888 இல் இவர் ஈர்ப்பு விசைக்கான எந்திரவியல் விளக்கத்தை உருவாக்கினார்.

அறிவியல் இலக்கியம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_யார்கோவ்சுகி&oldid=2422242" இருந்து மீள்விக்கப்பட்டது