இழைப்பி
மரவேலை இழைப்பி அல்லது தச்சரின் வாசி (Float), என்பது சாய்ந்த, தட்டையான ஒற்றை வெட்டரமாகும்.[1] இது விளிம்பு இழைப்பி, தட்டைப் பக்க இழைப்பி என இருவகைப்படும்.[2] இவை வழக்கமாக மரத் தளத்தை சீராக இழைக்கப் பயன்படும் மரவேலைக் கைக்கருவி ஆகும். இழைப்பி, வெட்டவும் தட்டையாக்கவும் சீராக்கவும் பயன்படுகிறது. எனவே இவை தளவிழைப்புக்கு மட்டுமன்றி பலவகை மரவேலைகளுக்குப் பயன்படுதலைக் காணலாம்.
இழைப்பிகளும் ஒருவகையில் அரங்களையும் தேய்ப்பரங்களையும் ஒத்தவையே. தேய்ப்பரங்கள் பருவட்டானவை. அவற்றைக் கூர்தீட்ட முடியாது. அரங்களும் கோண முகடுகளே என்பதால் இவற்றையும் கூர்தீட்ட முடியாது. இழைப்பிகள் இணையான பற்களைக் கொண்டவை. எனவே அலகின் தடிப்புக்கேற்ப இவற்றைப் பலமுறை கூர்தீட்டலாம்.
விளிம்பு இழைப்பிகள் ஆரம்பப் பற்கள் உள்ள அலகுடையவை. எனவே இவை பொதுவாக மரத்தில் ஆப்பு வடிவக் காடிவெட்டப் பயன்படுகின்றன. தட்டைப் பக்க இழைப்பிகள் அரம் அல்லது தேய்ப்பரத்தைப் போன்றது. என்றாலும் இவற்றின் வெட்டுமுனைகள் தொடர்நிலை இணையான பற்களைக் கொண்டவை.