உள்ளடக்கத்துக்குச் செல்

இளைய அப்துல்லாஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளைய அப்துல்லாஹ்
பிறப்புஎம். என். எம். அனெஸ்
மே 21, 1968 (1968-05-21) (அகவை 56)
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, இலங்கை
இருப்பிடம்இலண்டன்
தேசியம்இலங்கைச் சோனகர்
அறியப்படுவதுஎழுத்தாளர், ஒலி, ஒளிபரப்பாளர்
பெற்றோர்மொகமட் நவாஸ், ஹஃப்சா
வலைத்தளம்
வலைப்பதிவு

இளைய அப்துல்லாஹ் (பிறப்பு: 21 மே 1968) இலங்கை முசுலிம் எழுத்தாளரும், வானொலி, தொலைக்காட்சி ஊடகவியலாளரும் ஆவார்.[1] இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

[தொகு]

இளைய அப்துல்லாஹ் இலங்கையின் வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம், புளியங்குளத்தில் ஒட்டுசுட்டான் என்ற கிராமத்தில் மொகமட் நவாஸ், ஹப்சா ஆகியோருக்குப் பிறந்தவர். 1984 ம் ஆண்டில் இருந்து சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.[1] 1996, 97 ஆம் ஆண்டுகளில் இலங்கை வானொலி தேசிய சேவையில் ‘விடியலை நோக்கி’ எனும் சமாதானத் தொனிப் பொருளில் சஞ்சிகை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 2000 சூலை முதல் இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர், நிகழ்ச்சி விவரணத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.[1] தற்போது ஐபிசி தமிழ் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றுகிறார்.

விருதுகள்

[தொகு]
  • இலங்கை சாகித்திய மண்டலப்பரிசு 2005 (பிணம் செய்யும் தேசம், கவிதை நூலுக்காக)
  • இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ சிறீவர்த்தன விருது 2006

எழுதிய நூல்கள்

[தொகு]
தளத்தில்
இளைய அப்துல்லாஹ் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • துப்பாக்கிகளின் காலம், சிறுகதைத் தொகுப்பு, 2004
  • பிணம் செய்யும் தேசம், கவிதைத் தொகுப்பு, இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கிறது.
  • அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் கட்டுரைகள்
  • கடவுளின் நிலம், கட்டுரைகள்
  • லண்டன் உங்களை வரவேற்பதில்லை, கட்டுரைகள்
  • நீரில் விளக்கெரியும் நந்திக்கடல், கட்டுரைகள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "இளைய அப்துல்லாஹ் (அனெஸ்) இலண்டன்-". அக்கினிக்குஞ்சு. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளைய_அப்துல்லாஹ்&oldid=4043482" இலிருந்து மீள்விக்கப்பட்டது