இளம் பழையன் மாறன்
Jump to navigation
Jump to search
இளம் பழையன் மாறன் என்பவன் வித்தை என்னும் ஊரிலிருந்துகொண்டு அரசாண்ட மன்னன். 9-ஆம் பதிற்றுப்பத்துத் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறைஇவனை வென்றான். [1]
இவன் பாண்டியக் குடிச் சிற்றரசனான பழையனின் தம்பி ஆவான். இளஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்ட சோழ அரசனும், பொத்தியார் என்னும் புலவனின் நண்பனும் ஆனவன் கோப்பெருஞ்சோழன். பாரி மகளிரைத் திருமணம் செய்கொள்ள மறுத்த விச்சிக்கோ. இந்த இருவரும் மாறன் காலத்தவர்கள்.
அண்ணன் பழையன் மோகூர் மன்னன். தம்பி இளம்பழையன் மாறன் வித்தை என்னும் ஊரில் இருந்துகொண்டு ஆண்ட மன்னன். இருவரும் சிற்றரசர்கள்.
அடிக்குறிப்பு[தொகு]
- ↑
இரு பெரு வேந்தரும் விச்சியும் வீழ,
அரு மிளைக் கல்லகத்து ஐந்து எயில் எறிந்து,
பொத்தி ஆண்ட பெருஞ் சோழனையும்,
வித்தை ஆண்ட இளம் பழையன் மாறனையும்,
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று (பதிற்றுப்பத்து, பதிகம் 9)