விச்சிக்கோ
Appearance
விச்சிக்கோ என்பவர் சங்ககால மன்னர்களில் ஒருவன். விச்சிமலை நாட்டின் அரசன். விச்சிக்கோ, விச்சிக்கோன், விச்சியர் பெருமகன் என்றெல்லாம் சங்கநூல்களில் இவன் குறிப்பிடப்படுகிறான்.
பாரிமகளிரை மணக்க மறுத்தவன்
[தொகு]பாரி இறந்தபின் கபிலர் பாரிமகளிரை அழைத்துக்கொண்டு சென்று அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டினார். விச்சிக்கோ பாரிமகளிரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது. [1]
விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோ
[தொகு]விச்சிக்கோ தன் தம்பி இளவிச்சிக்கோவுக்குக் கொடை உள்ளம் இல்லாத நன்னன் ஒருவனின் மகளைத் திருமணம் செய்துவைத்தான். [2]
விச்சியர் பெருமகன் வேந்தரோடு போரிட்டது
[தொகு]விச்சியர் பெருமகன் விற்படை வீரர்களை மிகுதியாகப் பெற்றிருந்தான். இவன் வேந்தரை எதிர்த்துப் போரிட்டான். இந்தப் போர் புலியும் காடைப்பறவையும் மோதுவது போல் உள்ளது என்று பேசிக்கொண்டு குறும்பூர் மக்கள் ஆரவாரம் செய்தனர். [3]