உள்ளடக்கத்துக்குச் செல்

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
Pre-eclampsia
ஒத்தசொற்கள்இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் குருதிநஞ்சுகள் (இ கு கு-PET), இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல்
இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலிலும் பேறுகால உயர்குருதியழுத்தத்திலும் காணப்படும் மீவளர் உதிர்வுக் குருதிக்குழல் நோயின் நுண்வரைவு. H, E கறைகள்.
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்உயர்குருதியழுத்தம், சிறுநீரில் புரதமிகை[1]
சிக்கல்கள்குருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு[2][3]
வழமையான தொடக்கம்கருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு[2]
சூழிடர் காரணிகள்பருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு[2][4]
நோயறிதல்குருதியழுத்தம் > 140 மிமீ Hg, உயர்நிலையிலும் அல்லது 90 மிமீ Hg, தாழ்நிலையிலும் இருதடவை அமைதல்[3]
தடுப்புஆசுப்ரின், கால்சிய நிரப்பு, முந்துநிலை உயர்குருதியழுத்த மருத்துவம்[4][5]
சிகிச்சைநெருக்கடிநிலையில் குழந்தைப் பிறப்பு, மருந்துகள் தரல்[4]
மருந்துஇலேபடாலோ, மிதால்டோப்பா], மகனீசியச் சல்பேட்[4][6]
நிகழும் வீதம்2–8% மகப்பேறுகளில்[4]
இறப்புகள்கருவுற்றநிலை உயர்குருதியழுத்தக் கோளாறால் 46,900 பேர் இறப்பு (2015)[7]

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (Pre-eclampsia) (PE)என்பது கருவுறல்நிலைக் கோளாறு ஆகும். இந்நிலையில் உயர்குருதியழுத்தமும் சிறுநீரில் கணிசமான அளவு புரதமும் அமையும்.[1][8] இந்நிலை கருவுற்ற பிறகு 20 வாரத்துக்குப் பின்னர் தோன்றும்.[2] கடுமையான நிலையில் குருதிச் சிவப்புக்கலப் பகுப்பு, குறை குருதிச்சிவப்புத் தட்டுக்கல எண்ணிக்கை, கல்லீரல் செயல் குலைவு, சிறுநீரகச் சிக்கல்கள், வீக்கம், நுரையீரல் நீர்கோர்ப்பால் குறு மூச்செறிவு, சூல்வலிப்பு ஆகியன அமையும்.[2][3] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் தாய்-சேய் இருவரையும் தாக்கும்.[3] இதற்குத் தக்க மருத்துவம் தராவிட்டால், சூல்வலிப்பு ஏற்படும்.[2]

இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலுக்கான இடர்க்காரணிகளாக பருமன்மிகை, முந்து உயர்குருதியழுத்தம், முதிர் அகவை, நீரிழிவு ஆகியன அமையும்.[2][4] இது இருகுழவி தாங்கும் பெண்களின் முதல் பேறுகாலத்தில் அடிக்கடி அமையும்.[2] மற்ற காரணிகள் அல்லாமல், இயல்பற்ற மிகையான குருதிக்குழல்கள் கொப்பூழ்க்கொடியில் அமைதலும் இந்நிலை ஏற்பட காரணமாகிறது.[2] பெரும்பாலான நேர்வுகள் மகப்பேற்றுக்கு முன்பே கண்டறியப்படுகின்றன. மிக அருகியே இந்நிலை மகப்பேற்றுக்குப் பின்னர் அமையும்.[3] வரலாற்றியலாக நோய் அறிய உயர்குருதியழுதமும் சிறுநீரில் புரதமிகையும் ஆகிய இரண்டு மட்டுமே கருதப்பட்டாலும் சில வரையறைகள் இவற்றுடன் அமையும் உறுப்புக் கோளாறையும் கருதுகின்றன.[3][9] பெண்கள் கருவுற்ற 20 வாரத்துக்குப் பிறகு, நான்கு மணிநேர இடைவெளிகளில் நிலவும் மேனிலைக் குருதியழுத்தம் 140 மிமீ இதள் (பாதரசம்) மட்டத்தினும் கூடினாலும் அது. அ;ல்லது தாழ்நிலைக் குருதியழுத்தம் 90 மிமீ இதள் மட்டத்தை அடைந்தாலும் உயர்குருதியழுத்தமாக வரையறுக்கப்படுகிறது.[3] குழந்தை பிறப்பதற்கு முந்தைய ஆய்வில் இந்நிலையை எளிதாக அறியமுடியும்.[10][11]

இதற்கு மருத்துவமாக, உயர் இடர் வாய்ந்தவர்களுக்கு ஆசுப்ரின் தரப்படும். உணவு குறைவாக உட்கொள்பவர்களுக்கு கால்சிய நிரப்பு மாத்திரைகள் தரப்படும். உயரழுத்தம் வருவதற்கு முன்பு மாத்திரைகள் தரப்படும்.[4][5] இந்நிலையுள்ளவர்களுக்கு நெருக்கடி முறைகளில் அல்குல் வழியாகவோ அறுவையாலோ மகப்பேற்றையும் கொப்பூழ்க்கொடி நீக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும்.[4] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சலின் கடுமையையும் பேறுகால அளவையும் பொறுத்து மகப்பேறு மிக விரைந்து மேற்கொள்ளப்படும்.[4] குழந்தை பிறக்கும் முன் உயர்குருதியழுத்தத்துக்கான இலேப்டாலோ, மிதைல்டோப்பா மருந்துகள் தாயின் நலத்தை மேம்படுத்த தரப்படும்.[6] கடுமையான நேர்வுகளில் சூல்வலிப்பைத் தடுக்க, மகனீசியச் சல்பேட்டு தரப்படும்.[4] நோயைத் தவிர்க்கவோ மருத்துவமாகவோ படுக்கை ஓய்வும் உப்பு எடுத்துகொள்ளலும் பலன் தருவதில்லை.[3][4]

இந்நோய் உலக அளவில் 2–8% அளவு மகப்பேறுகளில் அமைகிறது. கருவுறலால் ஏற்படும் பெரும்பாலான இறப்புகளுக்கு இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் உட்பட்ட உயர்குருதியழுத்தக் கோளாறுகளே கரணமாகின்றன.[6] இவற்றால் 2015 இல் 46,900 இறப்புகள் நேர்ந்தன.[7] வழக்கமாக இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் கருவுற்ற 32 வாரத்துக்குப் பிறகே ஏற்படும்; என்றாலும், இது அதற்கு முன்பே அமையும்போது மிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும்.[6] இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் வந்த பெண்களுக்கு பிந்தைய வாழ்க்கையில் இதய நோய், மாரடைப்பு ஆகிய இடர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.[10] சூல்வலிப்பு எனும் சொல் மின்னல் எனும் பொருள் உடைய கிரேக்கச் சொல்லில் இருந்து உருவாகியது.[12] முதன்முதலில் இந்நிலையின் விவரிப்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இப்போக்கிரட்டீசால் குறிக்கப்பட்டுள்ளது.[12]

அறிகுறிகள்

[தொகு]

கைகளிலும் முகத்திலும் ஏற்படும் வீக்கம் இதற்கான முதன்மையான அறிகுறியாக முதலில் கொள்ளப்பட்டது. என்றாலும், வீக்கம் கருவுறலின் பொது அறிகுறியாகவும் விளங்குவதால், வீக்கம் மட்டுமே இதனை வேறுபடுத்தும் தெளிவான அறிகுறியாக எப்போதும் பயன்பட முடியாது. அழுத்தும்போது குழியைத்தரும் கை, கால், முகம் ஆகியவற்றில் ஏற்படும் இயல்பற்ற வீக்கம் அதாவது அழுந்தியல்பு வீக்கம் மிகவும் குறிப்பிடத் தகுந்த அறிகுறியாக அமையும். இந்நிலையை உடனடியாக நலப் பணியாளருக்கு அறிவிக்கவேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.0 1.1 "Preeclampsia 2012". Journal of Pregnancy 2012: 586578. 2012. doi:10.1155/2012/586578. பப்மெட்:22848831. 
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 Al-Jameil, N; Aziz Khan, F; Fareed Khan, M; Tabassum, H (February 2014). "A brief overview of preeclampsia.". Journal of clinical medicine research 6 (1): 1–7. doi:10.4021/jocmr1682w. பப்மெட்:24400024. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Hypertension in pregnancy. Report of the American College of Obstetricians and Gynecologists’ Task Force on Hypertension in Pregnancy.". Obstet. Gynecol. 122 (5): 1122–31. Nov 2013. doi:10.1097/01.AOG.0000437382.03963.88. பப்மெட்:24150027. http://www.tsop.org.tw/db/CFile/File/8-1.pdf. பார்த்த நாள்: 2018-10-20. 
 4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 WHO recommendations for prevention and treatment of pre-eclampsia and eclampsia. World Health Organization. 2011. hdl:10665/44703. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-4-154833-5. Archived (PDF) from the original on 2015-05-13.
 5. 5.0 5.1 Henderson, JT; Whitlock, EP; O'Connor, E; Senger, CA; Thompson, JH; Rowland, MG (May 20, 2014). "Low-dose aspirin for prevention of morbidity and mortality from preeclampsia: a systematic evidence review for the U.S. Preventive Services Task Force.". Annals of Internal Medicine 160 (10): 695–703. doi:10.7326/M13-2844. பப்மெட்:24711050. https://archive.org/details/sim_annals-of-internal-medicine_2014-05-20_160_10/page/695. 
 6. 6.0 6.1 6.2 6.3 Arulkumaran, N.; Lightstone, L. (December 2013). "Severe pre-eclampsia and hypertensive crises". Best Practice & Research Clinical Obstetrics & Gynaecology 27 (6): 877–884. doi:10.1016/j.bpobgyn.2013.07.003. பப்மெட்:23962474. 
 7. 7.0 7.1 GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980–2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
 8. Hypertension in pregnancy. ACOG. 2013. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934984-28-4. Archived from the original on 2016-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-11-17.
 9. Lambert, G; Brichant, JF; Hartstein, G; Bonhomme, V; Dewandre, PY (2014). "Preeclampsia: an update.". Acta Anaesthesiologica Belgica 65 (4): 137–49. பப்மெட்:25622379. 
 10. 10.0 10.1 Steegers, Eric AP; von Dadelszen, Peter; Duvekot, Johannes J; Pijnenborg, Robert (August 2010). "Pre-eclampsia". The Lancet 376 (9741): 631–644. doi:10.1016/S0140-6736(10)60279-6. பப்மெட்:20598363. 
 11. US Preventive Services Task, Force.; Bibbins-Domingo, K; Grossman, DC; Curry, SJ; Barry, MJ; Davidson, KW; Doubeni, CA; Epling JW, Jr et al. (25 April 2017). "Screening for Preeclampsia: US Preventive Services Task Force Recommendation Statement.". JAMA 317 (16): 1661–1667. doi:10.1001/jama.2017.3439. பப்மெட்:28444286. 
 12. 12.0 12.1 Mohler ER (2006). Advanced Therapy in Hypertension and Vascular Disease. PMPH-USA. pp. 407–408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55009-318-6. Archived from the original on 2015-10-05.

வெளி இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்