இளம்பூச்சி
Appearance

உயிரியலில் இளம்பூச்சி (Nymph) எனப்படுவது, படிப்படியாக உருமாற்றத்துக்கு உட்படும் சில முதுகெலும்பிகளில், கருமுட்டையில் தொடங்கி, பால் முதிர்ச்சி அடைந்து முதிர்நிலையை அடையும்வரை தோன்றும் பல இடை வளர்நிலைகளைக் குறிக்கும். முக்கியமாக முழுமையற்ற உருமாற்றத்துக்கு உட்படும் பூச்சிகளின் விருத்தியின்போது இப்பூச்சிகள் உருவாகும். இவை முழுமையான உருமாற்றம் நிகழும் பூச்சிகளில் உருவாகும் வளர்நிலையான குடம்பிகளைப் போலன்றி, பால் முதிர்ச்சியடைந்து உருவாகும் முதிர்நிலைப் பூச்சிகளை உருவத்தில் ஒத்தவையாக இருக்கும். மேலும் இப்பூச்சிகளில் தோலுரித்தல் மூலம் கூட்டுப்புழு உருவாவதில்லை. இறுதிநிலைப் பூச்சியிலிருந்து, இறுதியான தோலுரித்தல் நிகழ்வின் மூலம் பால் முதிர்ச்சியடைந்த முதிர்நிலை தோன்றும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Truman, James (1999). The origins of insect metamorphosis. Washington: Macmillan Magazines Ltd. p. 447.[தொடர்பிழந்த இணைப்பு]