உள்ளடக்கத்துக்குச் செல்

இலை துளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தக்காளி இலையில் இருக்கும் இலைத்துளை, வண்ணமாக்கப்பட்ட எலக்ட்ரான் நுண்ணோக்கி பிம்பம்
இலைத்துளையின் குறுக்குவெட்டுத் தோற்றம்
இலையின் கீழ் பகுதி. இந்த இனத்தில் காப்பு செல்கள் பச்சை நிறத்தில் உள்ளன. ஏனெனில் இவற்றில் குளோரோபில்கள் உள்ளன. புறத்தோலில் குளோரோபில்கள் இல்லாததால் அவை சிவப்பு நிறமிகளைப் பெற்றுள்ளன.

இலைத்துளைகள் (stomata) என்பவை தாவர இலை, தண்டு, மற்றும் வாயுப் பரிமாற்றத்தில் ஈடுபடும் பிற தாவர உறுப்புகளின் மேற்புறத்தோலில் காணப்படும் துளைகளுக்கானத் தாவரவியல் பெயராகும். இவற்றை சுடோமேட்டா என்ற பெயரால் அழைக்கிறார்கள்[1] [2] ஒவ்வொரு துளையின் ஓரமும் காப்பு செல்கள் எனப்படும் ஒரு சோடி சிறப்பு பாரங்கைமா செல்களால் ஆக்கப்பட்டுள்ளன. இவையே திறப்பின் அளவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைப் பெற்றுள்ளன.

இலைத்துளை என்ற இந்த சொல் வழக்கமாக இணைக்கப்பட்ட காப்பு செல்கள், இலைத்துளை உள்ளிட்ட ஒட்டுமொத்த இலைத்துளை வளாகத்தையும் குறிக்கிறது [3]. வாயுப் பரவல் மூலம் காற்று இந்த திறப்புகளின் வழியாகவே தாவரத்திற்குள் நுழைகிறது. ஒளிச்சேர்க்கையில் கிடைத்த கார்பன் டை ஆக்சைடும் மூச்சு விடுதலில் உருவாகும் ஆக்சிசனும் இத்துளைகளில்தான் உள்ளன. ஒளிச்சேர்க்கையின் போது உடன் விளைபொருளாகத் தயாரிக்கப்படும் ஆக்சிசன் இதே திறப்புகளின் வழியாக வளிமண்டலத்திற்கு பரவுகிறது. நீராவியும் இலைத்துளை வழியாக வளிமண்டலத்தில் நீராவிப் போக்கு என்ற செயல்முறை மூலம் பரவுகிறது.

இலை துளை
இலை துளை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Living Environment—Regents High school examination" (PDF). January 2011 Regents. NYSED. பார்க்கப்பட்ட நாள் 15 June 2013.
  2. στόμα. Liddell, Henry George; Scott, Robert; A Greek–English Lexicon at the Perseus Project.
  3. Esau, K. (1977). Anatomy of Seed Plants. Wiley and Sons. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-24520-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_துளை&oldid=2953531" இலிருந்து மீள்விக்கப்பட்டது