இலையடி பழச்செடி
Appearance
இலையடி பழச்செடி (Ruscus aculeatus, butcher's-broom[1] என்றும் அறியப்படும்) இது ஒரு பசுமைமாறா யுரேசிய புதர்ச்செடியாகும். இந்தப் புதரில் பச்சை நிற சிறிய மலர்கள் வசந்த காலத்தில் தோன்றும். பொதுவாக தாவரங்களின் தண்டுகளில் காம்புகள் தோன்றி பூத்துப் பழங்கள் தோன்றும். ஆனால் இந்த புதர்செடியில் இலைகளின் நடுவில் காம்புகள் தோன்றி பூத்து, காய்த்து பழுக்கின்றன. இதன் இலைகளே தண்டுகளாக செயல்படுகின்றன. அதாவது தண்டுகள் தட்டையாக இலைபோல இருக்கின்றன. பெரும்பாலும் இதன் விதைகள் பறவைகள் வழியாகவே பரவுன்றன, என்றாலும் கிழங்குகள் வழியாகவும் இந்தப் புதர்கள் பரவுகின்றன. இது தோட்டங்களிலும் வளர்க்கப்படுகின்றது அங்கிருந்தும் இது பரவுகிறது. இந்தச் செடியில் இருந்து மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.
பொதுவானப் பெயர்கள்
[தொகு]- Butcher's-Broom
- Kneeholy, Knee Holly, Kneeholm
- Jew's Myrtle
- Sweet Broom
- Pettigree
- Λαγομηλιά (Lagomilia): Hare's apple (கிரேக்க மொழியில்)
- Le Fragon: The Butcher (பிரெஞ்சு மொழியில்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BSBI List 2007". Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-01-25. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
வெளி இணைப்புகள்
[தொகு]- botanical.com: A Modern Herbal, Broom, Butcher's
- nutrasanus.com: NutraSanus, Butcher's Broom Benefits and Information பரணிடப்பட்டது 2010-02-18 at the வந்தவழி இயந்திரம்