இலுப்பையூர் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலுப்பையூரில் உள்ள நெல் வயலின் காட்சி.

இலுப்பையூர் (Iluppaiyur) திருச்சி மாவட்டத்தில் சாத்தனூர் பஞ்சாயத்தில் அமைந்துள்ள ஒரு கிரமமாகும். முசிறி தாலுகாவைச் சேர்ந்த திண்ணனூர் அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்ட, இலுப்பையூரின்  பின்கோடு எண் 621006. இக்கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இலுப்பையூர், திருச்சியிலிருந்து சுமார் 30 கி. மீ. தொலைவிலும், கரட்டாம்பட்டியிலுருந்து  (திருச்சி -துறையூர் மெயின் ரோடு  SH-62) 4 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கிணற்று பாசணம் மூலம் செய்யும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட இவ்வூரின் பிரதான விவசாய உற்பத்தி தானியம் நெல்லாகும். இலுப்பையூரின் மொத்த மக்கள் தொகை சுமார் 500 பேர். தற்போது, சுமார் 300 வாக்காளர்கள் இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்[1]. சுமார் 60 மாணவ, மாணவிகள் படிக்கும் முசிறி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியும் அரசு அங்கன் வாடி மையமும் இலுப்பையூரில் அமைந்துள்ளது.

கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்[தொகு]

சித்திரை திருவிழாவிற்காக அலங்கரிக்கப்பட்டுள்ள அருள்மிகு மகாமாரியம்மன் கோயில்.

அருள்மிகு  செல்வ கணபதி கோவில், அருள்மிகு மகாமாரியம்மன் கோயில், அருள்மிகு ஆலடி முத்து கருப்பண்ணசாமி கோயில், அருள்மிகு வல்லம் பிடாரி அம்மன் கோயில்  மற்றும் அருள்மிகு அய்யணார் கோயில் ஆகிய கோயில்கள் இலுப்பையூரில் அமைந்துள்ளது. மேலும், ஆறுநாட்டு வேளாளார்களின் குலதெய்வ கோயில்களான் அருள்மிகு தொட்டிச்சி அம்மன் கோயில் மற்றும் அருள்மிகு ஆப்பூர் நல்லேந்திரர் கோயில் ஆகியனவும் இங்கு அமைந்துள்ளது.

சித்திரைத் திருவிழா (குடியழைப்பு விழா), இலுப்பையூரில் கொண்டாடப்படும் பிரபலமான திருவிழாக்களில் ஒந்றாகும். ஐந்து நாட்கள் நீடிக்கும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கொண்டாடப்படும். பணி நிமித்தம் காரணமாக பல்வேறு இடங்களில் மக்கள் வசித்தாலும், ஊரில் திருவிழா என்றால் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள்.[2]

References[தொகு]

  1. "View Iluppaiyur Electoral Rolls in PDF format". Elections.tn.gov.in. பார்த்த நாள் 2012-06-01.
  2. "Official Website of Iluppaiyur" (en-US). பார்த்த நாள் 2018-04-28.