இலியொனீது சகாரோவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலியொனீது எரிமியேவிச் சகாரோவ் (Leonid Eremeyevich Zakharov; உருசியம்: Леони́д Ереме́евич Заха́ров; பிறப்பு: 14 சனவரி 1947) உருசிய இயற்பியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவில் பிரின்சுடென் பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறார். இவர் 1965 முதல் 1971 வரை மாசுக்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

மின்கடத்திப் பாய்மங்களின் காந்தவியல் மற்றும் பண்புகள், உறுதித்தன்மை, சமநிலை, கடத்தல் ஆகியவற்றின் கோட்பாடு மற்றும் எண்ணியல் கணக்கீட்டிற்கான பங்களிப்புகள் செய்தமைக்காகவும், பிளாசுமா ஆராய்ச்சிக்கு உதவும் டோகாமாக் இயந்திரத்தில் இலித்தியம் சுவரை பயன்படுத்தி சிக்கனமான உலைக்கான அணுகுமுறையாக மாற்றுவது தொடர்பான புதுமையான யோசனைகளும் வழங்கினார். இதற்காக 2007 ஆம் ஆண்டில்[1] பிளாசுமா இயற்பியல் பிரிவால் பரிந்துரைக்கப்பட்டு இவருக்கு அமெரிக்க இயற்பியல் சமூகத்தில் ஓர் உறுப்பினர் என்ற தகுதி வழங்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "APS Fellows 2007". www.aps.org (ஆங்கிலம்). 2017-04-20 அன்று பார்க்கப்பட்டது.
  2. "APS Fellow Archive". www.aps.org (ஆங்கிலம்). 2017-04-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "APS Fellowship". www.aps.org (ஆங்கிலம்). 2017-04-20 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியொனீது_சகாரோவ்&oldid=3170777" இருந்து மீள்விக்கப்பட்டது