இலியாசு அசுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலியாசு அசுமி
Iliyas Azmi
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிசாகபாத்து மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-08-22)22 ஆகத்து 1934
Azamgarh, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு4 சூன் 2023(2023-06-04) (அகவை 88)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
துணைவர்பதருன்னிசா
பிள்ளைகள்8
வாழிடம்கார்தோய்
இணையத்தளம்www.ilyasazmi.com
As of 17 செப்டம்பர், 2006
மூலம்: [1]

இலியாசு அசுமி (Iliyas Azmi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1934 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில் சாகாபாத்து மக்களவைத் தொகுதியிலும் 2009 ஆம் ஆண்டில் கேரி மக்களவைத் தொகுதியிலும் பகுசன் சமாச் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.[1] ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 2016 ஆம் ஆண்டில் விலகினார்.

வாழ்க்கை[தொகு]

அசுமி 1934 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தில் உள்ள சதர்பூர் பராவ்லி-புல்பூரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் முகமது மருஃப் என்பதாகும்.[2] புல்பூரில் உள்ள ரோசுதுல் ஓலுமில் இலியாசு அசுமி படித்தார். [3]

1950 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதியன்று பதருன்னிசா என்ற பெண்ணை இவர் திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு நான்கு மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருந்தனர். 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று இலியாசு அசுமி அப்பல்லோ மருத்துவமனையில் தனது 88ஆவது வயதில் காலமானார் [4]

பதவிகள்[தொகு]

  • 1980–1986: பொதுச் செயலாளர், முசுலிம் மச்லிசு, உத்தரப் பிரதேசம். [3]
  • 1986–1987: துணைத் தலைவர், முசுலிம் மச்லிசு, உத்தரப் பிரதேசம். [3]
  • 1987–1989: தலைவர் , முசுலிம் மச்லிசு, உத்தரபிரதேசம். [3]
  • தலைவர், அகில இந்திய முசுலிம் மச்லிசு. [3]
  • 1996: பதினொன்றாவது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [3]

புத்தகங்கள்[தொகு]

இந்தி புத்தகங்கள்[தொகு]

  • 'சம்பர்தாயிக்த குலின் தந்திர கி இயரூரத்.'
  • 'பாபா சாகேப் பீம்ராவ் அம்பேத்கர்.' [3]
  • 'பெரியார் ராம சுவாமி நாயக்கர்.' [3]
  • 'இன்சான் அவுர் தேவ்தா.' [3]

உருது புத்தகங்கள்[தொகு]

  • 'பயமே சிந்தகி.'
  • 'முசலமனோ கி சியாசத் இயகம் அவுர் இலாசு.' [3]
  • அரிசானோ கி மொராட்.' [3]
  • 'இரான் கா இசுலாமி இன்க்லாப் அகிகத் கே ஐயனே மே.' [3]
  • 'காகியா தருலுலும் யா பைனசக்வாமி சச்சிசு [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Aquib siddiqui (7 September 2013). "AAP goes all out to woo Muslim voters". The Sunday Guardian. http://www.sunday-guardian.com/investigation/aap-goes-all-out-to-woo-muslim-voters. 
  2. "ILIYAS AZMI(Bahujan Samaj Party(BSP)):Constituency- Kheri(UTTAR PRADESH) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 25 May 2021.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 "Biographical Sketch of Member of XI Lok Sabha". பார்க்கப்பட்ட நாள் 25 May 2021."Biographical Sketch of Member of XI Lok Sabha". loksabhaph.nic.in. Retrieved 25 May 2021.
  4. Roy, Shantanu (4 June 2023). "पूर्व सांसद इलियास आजमी का निधन". Janta Se Rishta (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 5 June 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலியாசு_அசுமி&oldid=3839542" இலிருந்து மீள்விக்கப்பட்டது