இலித்தியம் முக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென் அமெரிக்காவின் வறண்ட மூலைவிட்டத்திற்குள் இலித்தியம் முக்கோணத்தின் வரைபடம்.

இலித்தியம் முக்கோணம் (Lithium Triangle) என்பது அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி நாடுகளின் எல்லைகளைச் சுற்றியுள்ள இலித்தியம் இருப்புக்கள் நிறைந்த ஆண்டிசு மலைத் தொடரின் ஒரு பகுதியாகும். இம்முக்கோணத்தில் இலித்தியம் பல்வேறு பகுதிகளில் குவிந்துள்ளது. உப்புப் படுகைகளாகச் சேர்ந்து அடகாமா பாலைவனம் மற்றும் அதன் வறண்ட பகுதிகளில் இத்தகைய இலித்தியக் குவியல்கள் காணப்படுகின்றன. பொலிவியாவிலுள்ள சலார் டி உயுனி உப்புப் படுகை சிலியிலுள்ள சலார் டி அட்டகாமா, அர்ஜென்டினாவிலுள்ள சலார் டெல் ஓம்பர் முயர்ட்டோ உள்ளிட்டவை மிகப்பெரிய உப்புப் படுகைகளாகும்.

உலகின் இலித்தியம் இருப்புக்களில் 54% இப்பகுதியில் இருப்பதாக கருதப்படுகிறது. [1] எதிர்கால நீர்மூழ்கிக் கப்பல்களில் பொருத்த திட்டமிடப்பட்டுள்ள இலித்தியம் -அயனி மின்கலன்களில் நிரப்புவதற்கு இலித்தியம் தேவைப்படும் என்பதால் இந்திய கடற்படை லித்தியம் முக்கோணத்தில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளது. [2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ellsworth Dickson (2017). "South America's prospective - The Lithium Triangle". Resource World. பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  2. Indian Defence News. "India to tap ‘Lithium Triangle’ for Lithium-ION batteries onboard Indian Navy subs". The Indian Hawk. https://www.theindianhawk.com/2020/12/india-to-tap-lithium-triangle-for-lithium-ion-batteries-onboard-indian-navy-subs.html. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலித்தியம்_முக்கோணம்&oldid=3195509" இலிருந்து மீள்விக்கப்பட்டது