இலாபா பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலாபா பூண்டு சாடிகள்
இலாபா பூண்டு

இலாபா பூண்டு (The Laba garlic) என்பது புளிங்காடியால் பதப்படுத்தப்பட்ட பூண்டு வகையைக் குறிக்கிறது. இதன் செயற்கை நிறம் மரகத பச்சையாகும் அல்லது கடல்நீலம் ஆகும். இதன் சுவை காரமாகவும், சற்று நறுமணத்துடன் இருக்கும். சீன ஆண்டின் (சந்திர நாட்காட்டி) 12வது மாதத்தின் எட்டாம் நாளில் இலாபா திருநாள் வருகிறது. அத்திருநாளைக் குறிக்கும் வகையில் இப்பெயர் உருவானது.[1]

அதனால் இவ்வாறு தாயரிக்கப்படும் பூண்டு வகையை, இலாபா பூண்டு என அழைப்பர்.[2] இது தயாரிக்கப்படும் பகுதி சீனாவின் வடபகுதியாகும். சீனப் புத்தாண்டு அன்று இப்பூண்டினையும் வைத்து கொண்டாடுவர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Laba Garlic Recipe". Simple Chinese Food (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 7 மார்ச்சு 2024.
  2. Block, E. (2010). Garlic and Other Alliums: The Lore and the Science. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-190-9. 
  3. Happiness inside Laba garlic) பரணிடப்பட்டது 2 பெப்பிரவரி 2014 at the வந்தவழி இயந்திரம், 163news
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாபா_பூண்டு&oldid=3904633" இலிருந்து மீள்விக்கப்பட்டது