இலானார்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலானார்கைட்டு
Lanarkite
பொதுவானாவை
வகைசல்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுPb2(SO4)O
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு

இலானார்கைட்டு (Lanarkite) என்பது Pb2(SO4)O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். காரீய சல்பேட்டு வகைக் கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. இசுக்காட்லாந்து மாகாணமான இலானார்க்சையர் மாகனத்தில் அமைந்துள்ள லெட்டில்சு கிராமத்தில் இலானார்கைட்டு கனிமம் கிடைக்கிறது. இதனாலேயே கனிமத்திற்கு இப்பெயரும் சூட்டப்பட்டது. வெண்மை அல்லது இளம் பச்சை நிறத்தில் ஊசிப் படிகங்களாக ஒற்றைச்சரிவச்சுடன் அரியபட்டகப் படிகங்களாக இக்கனிமம் தோன்றுகிறது. இது கலீனாவின் ஆக்சிசனேற்ற விளைபொருளாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலானார்கைட்டு&oldid=2588097" இலிருந்து மீள்விக்கப்பட்டது