இலாடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பால் செய்யப்பட்ட நவீன இலாடம்
குதிரை மற்றும் மாடுகளின் குளம்பில் அடிக்கப்படும் இலாடங்கள்
இலாடம் செய்யும் இரும்புக் கொல்லர், இந்தியா
காளையின் குளம்பிகளில் இலாடம் அடிக்கும் காட்சி

இலாடம் (ஒலிப்பு) அல்லது லாடம் (Horseshoe) [1] பொதி சுமக்கும் அல்லது வண்டி இழுக்கும் மாடு, குதிரை போன்ற விலங்குகளின் குளம்புகள் தேய்ந்து புண் ஏற்படாமல் இருக்க, குளம்பின் அடியில் ஆணிகள் அடித்துப் பொருத்தப்படும் வளைந்த கனத்த இரும்புத் தகடு ஆகும்.

இந்தியாவில் குதிரைகளுக்கு இலாடம் அடிக்கும் முறையை பாரசீகர்கள் அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் குதிரை மற்றும் மாடுகளுக்கு லாடம் அடிப்பவர்களை கொல்லர் என்பர்.

லாடம் அடித்தல்[தொகு]

குளம்புகளின் அடிப்புறத்தில் லாடம் அடிப்பதன் மூலம் போர்க் குதிரைகள், வண்டி இழுக்கும் குதிரைகள் மற்றும் மாடுகளின் குளம்புகள் உராய்வுகளால் தேய்ந்து புண் அல்லது காயம் ஏற்படாமல் இருக்க லாடம் அடிக்கப்படுகிறது. இதனால் இது போன்ற விலங்களின் குளம்புகள் பாதுகாக்கப்படுகின்றன.

லாடம் குறித்தான நம்பிக்கைகள்[தொகு]

அதிர்ஷ்டத்திற்கும், தீய ஆவிகளை விரட்டவும், வீட்டின் நிலைக்கதவில் அடிக்கப்பட்ட தேய்ந்த குதிரை லாடம்

மேற்கத்திய நாடுகளில் தேய்ந்து போன பழைய குதிரை லாடம் அதிர்ஷ்டமும், தீய ஆவிகளை விரட்டியடிக்கும் தாயத்து [2] போன்று வல்லமை பொருந்தியது என்ற நம்பிக்கையால், குதிரை லாடத்தை வீட்டின் முன்புற வாயிற் கதவில் பொருத்திவிடும் வழக்கம் உள்ளது. [3] இந்நம்பிக்கை பத்தாம் நூற்றாண்டில் காண்டர்பரி ஆர்ச் பிஷப் டங்ஸ்டன் காலத்தில் இங்கிலாந்தில் துவங்கியது. [4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [1]
  2. [https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81}[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Superstition Bash: Horseshoes". Committee for Skeptical Inquiry.
  4. "Who was St Dunstan?". St Dunstan Episcopal Church. Archived from the original on 2015-04-04. Retrieved 2017-06-08.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Horseshoes
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாடம்&oldid=3791860" இலிருந்து மீள்விக்கப்பட்டது