இலவசப் பண்டம்
Jump to navigation
Jump to search
இலவசப்பண்டம் எனப்படுவது பொருளியலின்படி கிடைப்பருமையற்ற பண்டம் ஆகும். இலவசப் பண்டங்கள் உற்பத்தி செலவற்றவை, விலை பெறாது, பரந்தளவு காணப்படும், நேரடியாக நுகர்விற்கு உட்படுத்தப்படும், நுகர்வில் போட்டி காணப்படாது. இப் பண்டங்களுக்கானசந்தர்ப்பச்செலவு பூச்சியமாகும்.
உ-ம்: மழைநீர், காற்று, சூரியஓளி, சட்டக் கட்டுபாடற்ற அறிவுசார் பொருட்கள், சிந்தனைகள்
கொள்வனவின்போது இலவசமாகக் கிடைக்கும் பண்டங்கள் அதாவது பூச்சிய விலைக்குக் கிடைக்கும் பண்டங்கள் எல்லாம் பொருளியலில் இலவசப் பண்டமாகாது. காரணம் இவற்றின் உற்பத்திக்கு கிடைப்பருமையான வளங்கள் உபயோகப்பட்டிருக்கும்.
இலவசப்பண்டமாக இருப்பவை கிடைப்பருமை காரணமாக பொருளாதார பண்டமாக மாறும் சாத்தியமுள்ளது.