நுகர்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பொருளியலில் நுகர்வு (consumption) என்பது, பண்டங்களினதும், சேவைகளினதும் பயன் பெறுதற்குரிய இறுதிப் பயன்பாட்டைக் குறிக்கும்.
கேனீசியன் பொருளியலும் கூட்டு நுகர்வும்
[தொகு]கேனீசியன் பொருளியலில், கூட்டு நுகர்வு என்பது, மொத்தத் தனியாள் நுகர்வு ஆகும். இது, வருமானத்தில் இருந்து அல்லது, சேமிப்பில் இருந்து அல்லது கடன் வாங்கிய நிதியின் மூலம் வாங்கப்படும் நடப்பில் உற்பத்தி செய்யப்பட்ட, பண்டங்களையும் சேவைகளையும் வாங்குவதைக் குறிக்கும்.
வரலாறு
[தொகு]ஜான் மேனார்ட் கேனெஸ் (ஆங்கிலம்:John Maynard Keynes) என்பவர் நுகர்வுச் செயற்பாடு என்னும் எண்ணக்கருவை உருவாக்கினார். இதன்படி நுகர்வு என்பது இரு பகுதிகளைக் கொண்டிருக்கிறது:
- தூண்டிய நுகர்வு
- தனித்தியங்கும் நுகர்வு
ஆய்வுகள்
[தொகு]நுகர்வு பற்றிய ஆய்வுகள், சமூகமும், தனியாட்களும் (தனி நபர்களும்) எவ்வாறு, ஏன் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்கிறார்கள் என்றும், எப்படி இது சமூக மற்றும் மனிதத் தொடர்புகளைப் பாதிக்கிறது என்பதையும் அறிய முயல்கின்றன. இன்றைய ஆய்வுகள், பொருள் விளக்கம், அடையாள உருவாக்கத்தில் நுகர்வின் பங்கு, நுகர்வோர் சமூகம் ஆகியவை தொடர்பில் கவனம் செலுத்துகின்றன. முன்பு, உற்பத்தி, அதனைச் சூழவுள்ள அரசியல், பொருளாதார விடயங்களோடு ஒப்பிடுகையில், நுகர்வு என்பது முக்கியமற்ற ஒன்றாகவே நோக்கப்பட்டது. நுகர்வோர் சமூகத்தின் வளர்ச்சியும், சந்தையில் வளர்ந்துவரும் நுகர்வோர் சக்தியும், சந்தைப்படுத்தல், விளம்பரம் செய்தல், நெறிமுறைசார் நுகர்வின் (ethical consumption) வளர்ச்சி, போன்றவையும், நுகர்வை, நவீன வாழ்க்கை முறையின் முக்கிய விடயமாக ஏற்றுக்கொள்ள வைத்துள்ளன. நுகர்வு சார்ந்த சமூகவியல், வெப்லென் (Veblen) என்பாரின் கவனத்தை ஈர்க்கும் நுகர்வு பற்றிய ஆரம்பகால ஆக்கத்தைக் கடந்து வெகுதூரம் முன்னேறிவிட்டது. உற்பத்தியாளர்களாலும், சமூக நிலைமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக நுகர்வோரை நோக்கும் அணுகுமுறை வளர்ந்து வருவதனால், இன்றைய கோட்பாடுகள், நுகர்வைக் கட்டுப்படுத்தும் பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி ஆராய்கின்றன.