இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர்

ஆள்கூறுகள்: 12°35′50″N 79°45′31″E / 12.59722°N 79.75861°E / 12.59722; 79.75861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர்
Loyola Higher Secondary School, Kuppayanallur
அமைவிடம்
குப்பையநல்லூர், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவிடம்12°35′50″N 79°45′31″E / 12.59722°N 79.75861°E / 12.59722; 79.75861
தகவல்
வகைதனியார் மேல்நிலைப்பள்ளி
சமயச் சார்பு(கள்)கத்தோலிக்க திருச்சபை
மதப்பிரிவுஇயேசு சபைகள்
தொடக்கம்12 சூன் 1995; 28 ஆண்டுகள் முன்னர் (1995-06-12)
மேற்பார்வைசென்னை இயேசுயிட்சு திருச்சபை
பணிக்குழாம்33
தரங்கள்6 முதல் 12[1]
பால்இருபாலர்
மொத்த சேர்க்கை
மொழிதமிழ்

இலயோலா மேல்நிலைப் பள்ளி, குப்பையநல்லூர் (Loyola Higher Secondary School, Kuppayanallur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குப்பயநல்லூரில் அமைந்துள்ளது. தனியார் கத்தோலிக்க மேல்நிலைப் பள்ளியான இது 1995 ஆம் ஆண்டில் இயேசுயிட்களால் நிறுவப்பட்டது.[2] ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இங்கு கல்வி கற்கிறார்கள்.

வரலாறு[தொகு]

இலயோலா மேல்நிலைப் பள்ளியானது ஓங்கூரில் இருந்த பாரிசு தொடக்கப் பள்ளியிலிருந்து, நடுநிலைப் பள்ளியாகவும், பின்னர் உயர்நிலைப் பள்ளியாகவும், இறுதியாக மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது[3] 59 மாணவர்களின் முதல் தொகுதி 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி 71% தேர்ச்சி பெற்றது, 2007 ஆம் ஆண்டில் இச்சதவீதம் 95.4% ஆக உயர்ந்தது. இப்பள்ளி தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் நிதி உதவியை பெறவில்லை.[4] இது நான்கு இயேசுசபை சமய குருக்கள் மற்றும் 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தலித் குழந்தைகளின் கல்விக்காக இயேசுசபையால் நடத்தப்படும் ஓர் இரு பாலர் படிக்கும் தமிழ்-நடுத்தரப் பள்ளியாகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Canisius College intern. Accessed 14 August 2016.
  2. "Jesuit Chennai Mission". jesuitchennaimission.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-08-24.
  3. "Loyola Higher Secondary School, Kuppayanallur". Jesuit Madurai Province. 2021. பார்க்கப்பட்ட நாள் 20 May 2021.
  4. "Kanchipuram district" (PDF). Tamil Nadu Government. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  5. Nevett Fund. Accessed 14 August 2016.