உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை என்பது தியாகராஜா மகேஸ்வரன் அவர்களின் படுகொலையைக் குறிக்கும். ஜனவரி 1, 2008 அன்று கொழும்பில் இலங்கையின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1, 2008 இல் முற்பகல் 9:00 மணியளவில் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார். ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார். இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனை அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.[1],[2],[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Leading Sri Lanka Tamil MP killed (பிபிசி)
  2. கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை (புதினம்)
  3. Maheswaran MP assassinated in Colombo (தமிழ்நெட்)

வெளி இணைப்புகள்

[தொகு]