இறைமறுப்பாளர்களுக்கு எதிரான பாகுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இறைமறுப்பாளர்களுக்கு எதிரான பாகுபாடு என்பது இறைமறுப்பாளர்கள் எதிர்நோக்கும் பாதகமான பாகுபாட்டையும் ஒறுப்பு நடவடிக்கைகைகளையும் குறிக்கிறது.

இன்று பெரும்பாலான நாடுகளில் இறைமறுப்பாளர்களுக்கு எதிரான சட்ட, அரசியல், சமூக, பண்பாட்டுப் பாகுபாடு நிலவுகிறது. அரசியலமைப்பின்படி அமைந்த மக்களாட்சி நாடுகளில் இறைமறுப்பாளர்களுக்கு எதிரான சட்டப் பாகுபாடு பெரும்பாலும் குறைவு. ஆனால் நாட்டின் விதிகள், நிறுவனங்கள், சூழல்கள் இறைமறுப்பாளர்களுக்கு பாதகமாகவே அமைகின்றன. பல இசுலாமிய நாடுகளில் இறைமறுப்பாளர்கள் கடுமையான சட்ட அரசியல் சமூக பண்பாட்டு பாகுபாட்டையும் தண்டனைகளையும் எதிர்நோக்குகிறார்கள். சில இசுலாமிய நாடுகளில் இறைமறுப்பாளர்களுக்கு சட்டத் தகுதிநிலை மறுக்கப்படுகிறது, சமயத் துறவு செய்பவர்கள் மரண தண்டனையை எதிர்நோக்குகிறார்கள்.