உள்ளடக்கத்துக்குச் செல்

இருமெத்தில் அலுமினியம் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருமெத்தில் அலுமினியம் குளோரைடு
இனங்காட்டிகள்
1184-58-3 Y
ChemSpider 21171389
EC number 214-668-8
InChI
  • InChI=1S/2CH3.Al.ClH/h2*1H3;;1H/q;;+1;/p-1
    Key: JGHYBJVUQGTEEB-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 79147
  • C[Al](C)Cl
UNII B548L3505Q
பண்புகள்
C4H12Al2Cl2
வாய்ப்பாட்டு எடை 185.00 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.996 கி செ,மீ−3
உருகுநிலை −21 °C (−6 °F; 252 K)
கொதிநிலை 126–127 °C (259–261 °F; 399–400 K)
தீங்குகள்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H225, H250, H260, H314
P210, P222, P223, P231, P231+232, P233, P240, P241, P242, P243, P260, P264, P280, P301+330+331
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இருமெத்தில் அலுமினியம் குளோரைடு (Dimethylaluminium chloride) என்பது [(CH3)2AlCl]2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம அலுமினியம் சேர்மமான இது ஈரெத்தில் அலுமினியம் குளோரைடு சேர்மத்தைப் போலவே செயல்படுகிறது. விலை அதிகமென்பதால் இது குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது.[2]

மற்ற கரிம அலுமினியம் சேர்மங்களைப் போலவே இருமெத்தில் அலுமினியம் குளோரைடும் ஓர் இலூயிசு அமிலமாகும். சில டையீல்சு-ஆல்டர் வினைகளைத் தூண்டுவதற்கு இருமெத்தில் அலுமினியம் குளோரைடின் இந்த பண்பு பயன்படுத்தப்படுகிறது.[3]

கட்டமைப்பு

[தொகு]

AlR2Cl (R = ஆல்க்கைல், அரைல்) என்ற அனுபவச் வாய்பாட்டு சேர்மங்கள் பொதுவாக (R2Al)2(μ-Cl)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் இருமங்களாக காணப்படுகின்றன. "μ-" என்ற முன்னொட்டால் குறிக்கப்படும் பாலமாகும் ஈந்தணைவிகள் ஆலைடுகளாகும். இவை கரிமப் பதிலீடுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அலுமினியம் ஒரு நான்முகி வடிவத்தை ஏற்றுக்கொள்கிறது மற்றும் எண்ம விதியையும் பின்பற்றுகிறது.[4][5] இதற்கு நேர்மாறாக, மூயெத்தில் அலுமினியம் மற்றும் மும்மெத்தில் அலுமினியம் ஆகியவை ஆல்க்கைல் குழுக்களால் பாலம் அமைத்துக் கொள்கின்றன. இந்த சேர்மங்கள் எண்ம விதியையும் மீறுகின்றன.

பாதுகாப்பு

[தொகு]

இருமெத்தில் அலுமினியம் குளோரைடு எரியக்கூடிய சேர்மம் மட்டுமல்ல, வெடிக்கும் தன்மையும் கொண்டதாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aluminum, chlorodimethyl-". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. Snider, Barry B. (2001). "Dimethylaluminum Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289X.rd297. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93623-5.
  3. Danheiser, Rick L.; Renslo, Adam R.; Amos, David T.; Wright, Graham T. (2003). "Preparation of Substituted Pyridines Via Regiocontrolled [4 + 2] Cycloadditions of Oximinosulfonates: Methyl 5-Methylpyridine-2-Carboxylate". Organic Syntheses 80: 133. doi:10.15227/orgsyn.080.0133. 
  4. Brendhaugen, Kristen; Arne Haaland; Novak, David P.; Østvold, Terje; Alf Bjørseth; Powell, D. L. (1974). "The Molecular Structure of Dimethylaluminium Chloride Dimer, [(CH3)2AlCl]2 Redetermined by Gas Phase Electron Diffraction". Acta Chemica Scandinavica 28a: 45–47. doi:10.3891/acta.chem.scand.28a-0045. 
  5. McMahon, C. Niamh; Francis, Julie A.; Barron, Andrew R. (1997). "Molecular Atructure of [(tBu)2Al(μ-Cl)]2". Journal of Chemical Crystallography 27 (3): 191–194. doi:10.1007/BF02575988.