இரா. சின்னசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. சின்னசுவாமி (R. Chinnaswamy) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குக் கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சின்னசுவாமி கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையினைச் சார்ந்தவர். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். இவர் அதிமுக வேட்பாளராக 2006[1] மற்றும் 2011 தேர்தல்களில் போட்டியிட்டு சிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகத் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] 2016 தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு என் கார்த்திக் என்பவரிடம் தோல்வியுற்றார்.[3]


மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). 2018-06-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. 2012-03-20 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.
  3. "15th Assembly Members". Government of Tamil Nadu. 2016-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-05-02 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._சின்னசுவாமி&oldid=3544030" இருந்து மீள்விக்கப்பட்டது