இராவ் கோபால் தேவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராவ் கோபால்தேவ் சிங்கு
Rao Gopaldev Singh
ராவ் பகதூர்
இராவ் கோபால்தேவ் சௌக்கு, ரேவாரி
தலைவர், சிப்பாய்க் கிளர்ச்சி, 1857
முன்னையவர்இராவ் நாதுராம் சிங்கு
பின்னையவர்
    • இராவ் லால் சிங்கு 1877 ஆண்டுக்குப் பிறகு
பிறப்பு1829
ரேவார், அகிர்வால், பஞ்சாப் பகுதி
இறப்பு1862[1]
தந்தைஇராவ் நாதுராம் சிங்கு

இராவ் கோபால் தேவு (Rao Gopal Dev) இந்தியாவின் விடுதலைக்காக போராடிய பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புரட்சிகரத் தலைவர் ஆவார். இராசா கோபால் சிங் யாதவ் என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1829 ஆம் ஆண்டுக்கும் 1862 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார். அரியானா மாநிலத்தில் அகிர் சமூகத்தினர் ஆட்சி செய்த இரேவாரி நகரத்தில் வாழ்ந்தார். 1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இவர் தனது உறவினரான மகாராசா இராவ் துலா சிங் யாதவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்..[2] புகழ்பெற்ற மகாராசா ராவ் சாபாசு சிங்கின் ஆறாவது தலைமுறை வழித்தோன்றலாகவும் இராவ் துலா சிங்கின் முதல் உறவினராகவும் இராவ் கோபால் அறியப்படுகிறார். 1855 ஆம் ஆண்டில் இவரது தந்தை இராசா ராவ் நாது ராமின் மரணத்திற்குப் பிறகு இவர் 841 கிராமங்களின் தனிப்பட்ட வரியைப் பெற்றார். மகாராசா ராவ் துலா சிங் ரேவாரி அகிர்வாலின் இளவரசரும் மாநிலத்தின் ஆட்சியாளருமான மகாராசா ராவ் துலா சிங் ரேவாரி இவரை ரேவாரி மாநிலத்தின் ஆயுதப் படைகளின் தளபதியாக மாற்றினார்.[3]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahendragarh at A Glance >> History >>Modern Period". mahendragarh.gov.in. National portal of India. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  2. Sharma, Suresh K. (2006). Haryana: Past and Present. Mittal. பக். 252–53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8324-046-8. https://books.google.com/books?id=6n7vV0eiS3YC&pg=PA252. 
  3. Yadava, S. D. S. (2006) (in en). Followers of Krishna: Yadavas of India. Lancer Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7062-216-1. https://books.google.com/books?id=p69GMA226bgC&q=%22Rao+Gopal+Dev%22+-wikipedia&pg=PA73. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவ்_கோபால்_தேவு&oldid=3781737" இலிருந்து மீள்விக்கப்பட்டது