இராம் ரகுநாத் சௌத்ரி
Appearance
இராம் ரகுநாத் சௌத்ரி Ram Raghunath Chaudhary | |
---|---|
பதின்மூன்றாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | பானு பிரகாசு மிர்தா |
பின்னவர் | பன்வர் சிங் தாங்கவாசு |
தொகுதி | நாகவுர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஆகத்து 1933 நாகவுர் மாவட்டம், இராசத்தான் |
பெற்றோர் | புசா ராம் சௌத்ரி (தந்தை) மற்றும் கௌரி தேவி (தாய்) |
இராம் ரகுநாத் சௌத்ரி (Ram Raghunath Chaudhary) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1933 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 18 ஆம் தேதியன்று நாகவுர் நகரத்தில் புசா ராம் சௌத்ரிக்கும் தேவிக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாகவுர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 13ஆவது மக்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.[2] 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில், இவர் 2,67,914 அல்லது 38.02% வாக்குகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Member's Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
- ↑ "Members of 13th Lok Sabha". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
- ↑ "Election Commission Of India - General Elections 1999 25 - Nagaur Parliamentary Constituency". Rajasthan State Election Commission.