இராமு (குரங்கு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமு (Ramu) என்பது இந்திய மாநிலமான ஒரிசாவின் பாலேஸ்வர் மாவட்டத்தில் வசிக்கும் குரங்கு. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்த குற்றச்சாட்டின் பேரில் ஒரிசாவில் உள்ள ரெமுனா காவல் நிலையத்தில் 5 ஆண்டுகளாக இந்த குரங்கு சிறை வைக்கப்பட்டிருந்தது.

கைது[தொகு]

ஜெகநாத்பூர் கிராமத்தில் பல குழந்தைகளைத் தாக்கி கடித்தபோது இராமுவுக்கு மூன்று வயதாக இருந்தது. இராமுவால் தாக்கப்பட்ட குழந்தைகள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இராமுவினை வளத்தவர் முஸ்லீம் குடும்பத்தினைச் சார்ந்தவராக இருந்தார். இது கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தது. இந்த சம்பவத்திற்குப் பின்னர் இராமுவினைக் கைது செய்ய உள்ளூர் காவல்துறையினர் முடிவு செய்தனர். சில காலத்திற்குப்பின் விடுதலையானதும், இராமு மீண்டும் குழந்தைகளைக் கடிக்க ஆரம்பித்தது. இதனால் காவல்துறையினர் மக்களின் நன்மைக்காக மீண்டும் சிறையில் அடைக்க முடிவு செய்தனர்.

விடுதலை[தொகு]

இந்திய வனவிலங்கு விதிகளின் கீழ், இராமு போன்ற ரீசஸ் மாகேக் குரங்குகளைச் சிறையிலடைக்க இயலாது, ஏனெனில் இது அட்டவணை II ஆபத்தான உயிரினங்கள் வகையினைச் சார்ந்தது. இத்தகைய அட்டவணை உயிரினங்களைச் செல்லப்பிராணிகளாகவோ அல்லது கூண்டுகளில் அடைக்கவோ முடியாது. எனவே மாநில வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரினர். [1] காவல்துறையினர் இராமுவிற்கு வழக்கமான உணவைக் கொடுத்து நன்றாக நடத்தியதாகக் கூறுகின்றனர். ரெமுனா காவல் நிலையத்தின் பொறுப்பாளரான நிரஞ்சன் குமார் திர் ”இராமுக்கு வழக்கமான குளியல், நாள் ஒன்றுக்கு நான்கு முறை உணவளிப்பதாகத் தெரிவித்தார். ஆர்வலர்களின் போராட்டம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.[2] இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அக்டோபர் 18, 2006 அன்று குரங்கை விடுவித்து, வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Ramu checks in and the activists go wild". IANS. 2006-10-15 இம் மூலத்தில் இருந்து 2006-11-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061130124319/http://archive.gulfnews.com/articles/06/10/15/10074926.html. பார்த்த நாள்: 2006-10-19. 
  2. Ramu in the News

மேற்கோள்கள்[தொகு]

  • செய்திகளில் ராமு [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமு_(குரங்கு)&oldid=3234531" இலிருந்து மீள்விக்கப்பட்டது