இராபர்ட் கிராண்ட் ஐத்கென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராபர்ட் கிராண்ட் ஐத்கென்
Robert Grant Aitken
இராபர்ட் கிராண்ட் ஐத்கென் (1864-1951)
பிறப்பு(1864-12-31)திசம்பர் 31, 1864
ஜாக்சன், கலிபோர்னியா
இறப்புஅக்டோபர் 29, 1951(1951-10-29) (அகவை 86)
பெர்க்லி, கலிபோர்னியா
வாழிடம் ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம்

இராபர்ட் கிராண்ட் ஐத்கென் (Robert Grant Aitken, டிசம்பர் 31, 1864 - அக்டோபர் 29, 1951) அமெரிக்க வானியலாளர்.[1]

வாழ்க்கை[தொகு]

ஐத்கென் 1864ஆம் ஆண்டில் திசம்பர் 31ஆம் நாளன்று கலிஃபோர்னியாவில் உள்ள ஜாக்சனில் பிறந்தார். அவர் மசாசூசட்டு வில்லியம் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1888இல் இருந்து1891 வரை கலிபோர்னியாவில் உள்ள இலிவர்மோர் கல்லூரியில் கல்வி கற்பித்தார். பசுபிக் பல்கலைக்கழகக் கல்லூரியில் 1891 முதல் கணிதவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1895இலிருந்து 1935இல் ஓய்வுபெறும்வரை மவுண்ட் ஃஆமில்டனில் இருந்த லிக் வான்காணகத்தில் இயக்குநராக இருந்தார். [2] He was offered an assistant astronomer position at Lick Observatory in கலிபோர்னியா in 1895.[1]

இவர் இரும வின்மீன்களைப் பற்றிய ஆய்வை முறையாகத் தொடங்கி அவற்றின் இருப்புகளையும் அவை ஒன்றோடொன்று சுற்றும் வட்டணைகளையும் கணக்கிட்டறிந்தார். டபிள்யூ. ஃஉசேவுடன் இணைந்து 1899 இல் இருந்து இரும விண்மீன்களின் மாபெரும் அட்டவணையை உருவாக்கினார். இந்தப் பணியின் முன்னேற்றம் தொடர்ந்து இலிக் வான்காணகச் செய்தியிதழில் வெளியிடப்பட்டது.[2] ஃஉசே 1905 இல் விலகினார்; பின்னர் வந்த ஐத்கனோ வானளக்கை செய்வதை மட்டுமே விரும்பினார். என்றாலும் 1915 இல் இவர் ஏறக்குறைய 3100 இரும விண்மீன்களைக் கண்டுபிடித்தார். இவற்றோடு ஃஉசேவும் 1300 இரும விண்மீன்களைக் கண்டுபிடித்தார். இம்முடிவுகள் 1932 இல் வெளியிடப்பட்டன. இவை .வடமுனை 120 பாகையில் அமையும் இரும விண்மீன்களின் புதுப்பொது அட்டவணை எனப்பெயரிடப்பட்டன.[1] இந்த அட்டவணையின் வாட்டணைத் தகவல்கள் ஏராளமான விண்மீன்களின் பொருண்மை சார்ந்த புள்ளிவிவரங்களைக் கணக்கிட்டறிய பெரிதும் உதவியது. இவர் பர்மிங்காமின் இரும விண்மீன் பட்டியலையும் திருத்தி வெளியிட்டார். இரும விண்மீன்களின் அட்டவணை உருவாக்கத்துக்காக இவருக்கு புரூசு பதக்கம் 1926 இல் வழங்கப்பட்டது.[2]

தன் வாழ்நாளில் ஐத்கன், கோள்களின் நிலா இருப்புகளையும் வட்டணைகளையும் வால்வெள்ளிகளின் இருப்புகளையும் வட்டணைகளையும் கணக்கிட்டார்.இவர் 1908 இல் நடுவண் பசிபிக் கடலில் உள்ள பிளிண்ட் தீவுக்கு ஒளிமறைப்புத் தேட்டப் பணியில் சேர்ந்தார். இவரது நூல் இரும விண்மீன்கள் முதலில் 1918 இல் வெளியிடப்பட்டது.இதன் இரண்டாம் பதிப்பு 1935 இல் வெளியிடப்பட்டது.[2] இவர் 1894 இல் பசிபிக் வானியல் கழகத்தில் சேர்ந்தார். இவர் 1899 இலும் 1915 இலும் பசிபிக் வானியல் கழகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இவரக்கழகத்து வெளியீடுகளின் பதிப்பாசிரியராக விளங்கினார். இவர் 1932 இல் அரசு வானியல் கழகத்தில் டார்வின் உரையாற்றினார். இதில் அப்போது இணை உறுப்பினராக இவர் இருந்தார். பின்னர் 1918 முதல் 1928 வரை பன்னாட்டு வானியல் ஒன்றியத்து இரும விண்மீன்கள் குழுவின் தலைவராக விளங்கினார்.[2]

சொந்த வாழ்க்கை[தொகு]

ஐத்கன் காது கேட்புக் குறைபாட்டால் கேள்பொறியைப் பயன்படுத்தினார். இவர் 1888 இல் ஜெசி தாமசு என்பவரை மணந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்மகவும் ஒரு பெண்மகவும் பிறந்தனர். ஜெசி 1943 இல் இரந்துவிட்டார்.[2] இவரது பேரனான இராபர்ட் பேக்கர் ஐத்கன் பெயர்பெற்ற சென்புத்தரும் நூலாசிரியரும் ஆவார். இவரது பேத்தியான மார்யோரி ஜே. வோல்டு குறிப்பிடத்தக்க வேதியியலாளர் ஆவார்.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

  • பிரெஞ்சுக் கல்விக்கழகத்தின் இலாலண்டே பரிசு (1906இல் இதை இவர் வில்லியம் ஃஅசே (வானியலாளர்)| வில்லியம் ஃஅசே)வுடன் பகிர்ந்துகொண்டார்.
  • புரூசுப் பதக்கம் (1926)[2]
  • அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1932)
  • இரிட்டெனவுசுப் பதக்கம் (1934)
  • அரிசோனாப் பல்கலைக்கழகம் சார்ந்த பசிபிக் வில்லியம் கல்லூரி இவருக்குத் தகவுறு முதுமுனைவர் பட்டம் வழங்கியது. கலிப்போர்னியாப் பல்கலைக்கழகம் தகவுறு LL.D. பட்டம்

வழங்கியது.

இவர் பெயருடையவை

  • சிறுகோள் ஒன்று, 3070 ஐத்கென்
  • நிலாவில் உள்ள மிகப்பெரிய தென்முனை-ஐத்கென் படுகையின் பகுதியான குழிப்பள்ளம் ஒன்று, ஐத்கென் குழிப்பள்ளம்| ஐத்கென் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Daintith, John (1981). "Aitken, Robert Grant". Biographical Encyclopedia of Scientists 1. New York: Facts On File, Inc.. 9. ISBN 0-87196-396-5. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Jeffers, Hamilton M. (February 1952), "Robert Grant Aitken, 1864-1951", Publications of the Astronomical Society of the Pacific, 64 (376): 5, Bibcode:1952PASP...64....5J, doi:10.1086/126408

வெளி இணைப்புகள்[தொகு]

நினைவேந்தல்[தொகு]