இராதிகா வெமுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதிகா வெமுலா
Radhika Vemula
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிசெயற்பாட்டாளர்
பிள்ளைகள்உரோகித்து, இராசா, மற்றும் நீலீமா

இராதிகா வெமுலா (Radhika Vemula) இந்திய நாட்டைச் சேர்ந்த ஒரு தலித் உரிமைப் போராளியாவார். இவர் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறார்.[1][2][3][4]

2016 ஆம் ஆண்டு ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட அம்பேத்கர் மாணவர் சங்கத் தலைவரான இவரது மகன் உரோகித்து வெமுலா தொடங்கிய பணியை இவர் தொடர்கிறார். உரோகித்தின் தற்கொலை நிகழ்வு இந்தியா முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது. தலித் பாகுபாட்டின் ஒரு நிகழ்வாக பரவலான ஊடக கவனத்தையும் பெற்றது. ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது, இராதிகா வெமுலா மற்றும் பிற மாணவர்களை இவரது மகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் காவல்துறையினர் கைது செய்தனர். பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடுகளை ஒழிக்க இராதிகா முயல்கிறார்.[5] [6]

குடும்பம்[தொகு]

இராதிகா வெமுலாவிற்கு மூத்த மகன் ரோகித்து, இளைய மகன் இராசா மற்றும் மகள் நிலீமா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்..[1]

மத மாற்றம்[தொகு]

14 ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று 125 ஆவது அம்பேத்கர் பிறந்த நாளில் இராதிகா வெமுலா மற்றும் மகன் இராசா ஆகியோர் மகாராட்டிராவின் மும்பையில் புத்த மதத்திற்கு மாறினார்கள். பாபாசாகேப் அம்பேத்கரின் பேரன் பிரகாசு அம்பேத்கர், ரோகித்தின் குடும்பத்தை பௌத்த மதத்திற்கு மாற்ற மும்பை தாதரில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் பவனில் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Minhaz, Ayesha. "Born Dalit: Meet Radhika Vemula, Rohith's mother". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  2. "A Year After Rohith's Death, Radhika Vemula Continues To Be Harassed And Humiliated". HuffPost India (in ஆங்கிலம்). 2017-01-23. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
  3. "A mother's metamorphosis". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-10.
  4. "Standing In Solidarity with Radhika Vemula on International Women's Day". Auburn Seminary (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-03-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-17.
  5. Scroll Staff. "SC agrees to hear plea of Payal Tadvi and Rohith Vemula's mothers, asks Centre to respond in 4 weeks". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  6. "Rohith Vemula's mother, students arrested as protest rocks Hyderabad varsity". 17 January 2017.
  7. "रोहित वेमुला के परिवार ने अपनाया बौद्ध धर्म".
  8. "रोहित के परिवार ने हिंदू धर्म छोड़ा, बने बौद्ध". 14 April 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_வெமுலா&oldid=3923940" இலிருந்து மீள்விக்கப்பட்டது