இராதாபாய் சுப்பராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைலாசு இராதாபாய் சுப்பராயன் (Radhabai Subbarayan-22 ஏப்ரல் 1891-1960) ஓர் இந்திய அரசியல்வாதி, பெண்கள் உரிமை ஆர்வலர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவர் இந்திய அரசியல்வாதி பி. சுப்பராயனின் மனைவியும், மோகன் குமாரமங்கலம், பி. பி. குமாரமங்கலம் மற்றும் பார்வதி கிருஷ்ணன் ஆகியோரின் தாயும் ஆவார்.

இளமை[தொகு]

குத்முல் எனும் இராதாபாய் மங்களூரைச் சேர்ந்த ராவ் சாகிப் குத்முல் ரங்க ராவுக்கு மகளாகப் பிறந்தார்.[1] சித்ரபூர் சரசுவத் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் இராதாபாய்.[2] மங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை, மாநிலக் கல்லூரியில் பட்டம் பெற்றார். ஆக்சுபோர்டின் சோமர்வில் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறு வயதிலேயே விதவையான இராதாபாய், 1912-இல் குமாரமங்கலத்தின் ஜமீந்தார் பி. சுப்பராயனை மணந்தார். இந்த தம்பதிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.[2]

பொது வாழ்க்கை[தொகு]

இராதாபாய் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராக இருந்தார். அகில இந்திய மகளிர் மாநாட்டில் உறுப்பினராகவும் பணியாற்றினார். 1930-இல் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில், இவரும் ஜகானாரா ஷாநவாசும் மட்டுமே மாநாட்டிற்குப் பரிந்துரைக்கப்பட்ட பெண்கள் அமைப்புகளின் செயல் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காகப் போராடித் தோல்வியுற்றனர். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டிலும் இவர் பங்கேற்றார். இட ஒதுக்கீடு குறித்த பொதுக் கருத்தை மதிப்பிடுவதற்காக இராதாபாய் இதன் ஒரு பகுதியாக இருந்த லோத்தியன் குழுவில் நியமிக்கப்பட்டார்.

1937ஆம் ஆண்டில், இராதாபாய் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக ஒரு பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்பினார்.[3] சென்னை மாகாண வரவேற்பு குழுவின் தலைவர் இவருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.[3] இது குறித்து சி. ராஜகோபாலாச்சாரியிடம் சுப்பராயன் கேட்டபோது, அவர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்:

பெண்கள் என்ற காரணத்திற்காக பெண் வேட்பாளர்கள் வாய்ப்பு பெறுவதை அவர்கள் விரும்புகிறார்கள் என்று நான் நம்பவில்லை.[4]

இராதாபாய் 1938ஆம் ஆண்டில் ஒரு பொதுத் தொகுதியிலிருந்து மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் மாநிலங்களின் குழுவின் முதல் பெண் உறுப்பினரானார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "All India Chitrapur Defence Souvenir Fund Souvenir and Directory". Kanara Saraswat: A Monthly Journal of the Kanara Saraswat Association 85 (11): 5. 2004. http://www.kanarasaraswat.org/Magazine/MagNov04/MagNov04.pdf. பார்த்த நாள்: 8 November 2009. 
  2. 2.0 2.1 . 
  3. 3.0 3.1 Anup Taneja (2005). Gandhi, women, and the National Movement, 1920-47. Har Anand Publications. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8124110768. 
  4. Anup Taneja (2005). Gandhi, women, and the National Movement, 1920-47. Har Anand Publications. பக். 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8124110768. 
  5. Lakshmi N. Menon (1944). The position of women. Oxford University Press. பக். 28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதாபாய்_சுப்பராயன்&oldid=3912001" இலிருந்து மீள்விக்கப்பட்டது