இராஜேஷ் திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேஷ் திரிபாதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
முன்னையவர்வினய் சங்கர் திவாரி
தொகுதிசில்லுபார்
பதவியில்
மே 2007 – மார்ச் 2017
முன்னையவர்அரி சங்கர் திவாரி
பின்னவர்வினய் சங்கர் திவாரி
தொகுதிசில்லுபார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1964/1965 (அகவை 58–60)[1]
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்328 சில்லுபார் சட்டமன்றத் தொகுதி[1]
முன்னாள் கல்லூரிதீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், 1985

இராஜேஷ் திரிபாதி (Rajesh Tripathi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சில்லுபார் சட்டமன்றத் தொகுதியின் 18வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர்.[1][2] இவர் உத்தரப்பிரதேசத்தின் 15 மற்றும் 16வது சட்டமன்ற உறுப்பினராகவும் சில்லுபர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.[3][4]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

திரிபாதி சிவாகாந்த் திரிபாதியின் மகனாகப் பிறந்தவர். இவர் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சில்லுபரைச் சேர்ந்தவர். 1985 ஆம் ஆண்டு தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

திரிபாதி 2007-ல் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அரிசங்கர் திவாரியைத் தோற்கடித்தார். 2012 நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்றார். இதன் மூலம் 15 மற்றும் 16வது உத்தரப்பிரதேச சட்டமன்றங்களில் உறுப்பினரானார்.[3][4][5] 2017இல், திரிபாதி அரிசங்கர் திவாரியின் மகன் வினய் சங்கர் திவாரியிடம் தோல்வியடைந்தார்.[6]

2022 உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில், திரிபாதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Rajesh Tripathi(Bharatiya Janata Party(BJP)):Constituency- CHILLUPAR(GORAKHPUR) - Affidavit Information of Candidate:". myneta.info.
  2. 2.0 2.1 "Vinay Shankar Election Result 2022 LIVE Updates: Vinay Shankar of SP loses from Chillupar seat" (in en). News18. 10 March 2022. https://www.news18.com/news/politics/vinay-shankar-election-result-2022-live-updates-4855829.html. 
  3. 3.0 3.1 "2007 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3261-uttar-pradesh-2007/. 
  4. 4.0 4.1 "2012 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3262-uttar-pradesh-2012/. 
  5. "पूर्वांचल के बाहुबली हरिशंकर तिवारी को हराने वाले मुक्तिपथ वाले बाबा को BJP ने चिल्लूपार से बनाया प्रत्याशी, जानें कौन हैं राजेश त्रिपाठी" (in hi). Zee News. 28 January 2022. https://zeenews.india.com/hindi/india/up-uttarakhand/uttar-pradesh/rajesh-tripathi-defeated-purvanchal-bahubali-harishankar-tiwari-in-first-time-was-nominated-by-bjp-spup/1082500. 
  6. "2017 Election Results". இந்தியத் தேர்தல் ஆணையம். https://eci.gov.in/files/file/3471-uttar-pradesh-general-legislative-election-2017/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேஷ்_திரிபாதி&oldid=3743735" இலிருந்து மீள்விக்கப்பட்டது