உள்ளடக்கத்துக்குச் செல்

இராசமாயி பாலகிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசமாயி பாலகிசன்
Rasamayi Balakishan
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்டது
நிறுவனத் தலைவர், தெலங்காணா சம்சுக்ருதிகா சாரதி
பதவியில் உள்ளார்
பதவியில்
6 திசம்பர் 2015
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2014–2019
தொகுதிமனகொண்டூரு, தெலங்காணா மாநிலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு15 மே 1965 (1965-05-15) (அகவை 59)
ராருகுலா கிராமம், சித்திபேட்டை, தெலங்காணா, இந்தியா
துணைவர்இரசியா சுல்தானா
பிள்ளைகள்அமித்
ஆதர்சு
வாழிடம்(s)ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா

இராசமாயி பாலகிசன் (ஆங்கிலம்: Rasamayi Balakishan; தெலுங்கு: రసమయి బాలకిషన్ ; பிறப்பு 15 மே 1965) என்பவர் தெலங்காணாவைச் சேர்ந்த பாடகர் ஆவார். இவர் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள மனகொண்டூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 2014 முதல் 2019 வரை பதவியிலிருந்தார்.[1] இவர் பாடகர், கவிஞர் மற்றும் அரசியல் ஆர்வலர் எனப் பன்முகத் தன்மையுடையவர். அமைச்சருக்கான தகுதியுடன் கூடிய மாநில கலாச்சார குழுவின் (தெலங்காணா சம்சுகிருதிகா சாரதி) தலைவராகவும் பணியாற்றினார். பாலகிசன் தெலுங்கானா தூம்தாமின் நிறுவனர் ஆவார்.[2][3]

இளமை

[தொகு]

தெலங்காணா மாநிலம் சித்திபேட்டை மண்டலத்தில் உள்ள ராருகுலா கிராமத்தில் ராஜையா (இ. 2010) மற்றும் மைசம்மா (இ. 2013) ஆகியோருக்கு மகனாக எர்புலா பாலகிசன் பிறந்தார். இவருடைய பெற்றோர் இருவரும் படிப்பறிவில்லாதவர்கள். இவரது குடும்பம் இவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் இனிமையான இசைக்காகப் பிரபலமானது. இராசமயி என்ற நாட்டுப்புறப் பாடல் குழுவால் இவர் அறியப்பட்டார். இது இவரது பெயரின் ஒரு பகுதியாக மாறியது.

பாலகிசன் கலாச்சாரத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] தனி தெலங்காணா மாநிலம் அமைப்பதற்கான கலாச்சாரக் குழுவிற்கு இவர் தலைமையேற்றார். இவர் மாநில இயக்கத்தின் சிறு கலாச்சார அமைப்புகளில் ஒன்றான தெலுங்கானா தூம் தாம் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆவார்.[5]

தொழில்

[தொகு]

1995இல், இராசமாயி பாலகிசன் ஒரு ஆசிரியராகவும், கதை பாடகராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தெலங்காணா இராட்டிர சமிதியின் கலாச்சார குழுவில் இணைந்து பணியாற்றினார்.

இவர் இவரது உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் நடனம் மூலம் பார்வையாளர்களை தம்பக்கம் ஈர்த்து மகிழ்விக்கிறார். இவர் 2009-10-ல் தெலங்காணாவில் பல்வேறு இயக்க நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

தெலங்காணா இராட்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தெலங்காணா சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கரீம்நகரில் உள்ள மணகொண்டூர் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில சட்டமன்றத்தில் இவரது பேச்சு மற்றும் வாதத் திறமைக்காக மிகவும் மதிக்கப்படுகிறார். மேலும் எதிர்க்கட்சிகளுடன் விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

பாலகிசன் இரசியா சுல்தானா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அமித், ஆதர்சு என இரு மகன்கள் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MLA Rasamayi Balakishan Profile". Telangananewspaper.com. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  2. "'Rasamayi' Balakishan Named TSS Chairman". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  3. "TRS MLA Rasamayi Balakishan appointed as Chairman of Cultural Department". V6news.tv. 30 January 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  4. "Rasamayi BalaKishan Chairman of Cultural Department". Telanganastateofficial.com. 5 December 2014. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
  5. "Colours of Riot | Outlook India Magazine". Archived from the original on 10 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசமாயி_பாலகிசன்&oldid=3649796" இலிருந்து மீள்விக்கப்பட்டது