இராகுல் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராகுல் சிங்
Rahul Singh
பிறப்புஇந்தியா
புனைபெயர்மெய்யறிவு செயற்பாட்டாளர்
தொழில்நூலாசிரியர்
மொழிஆங்கிலம், இந்தி
தேசியம்சிங்கப்பூர்
கல்வி நிலையம்இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
வகைஆன்மிகம், ஆங்கில இலக்கியம், சுய உதவி நூல்கள்

ராகுல் சிங் (Rahul Singh) சிங்கப்பூரைச் சேர்ந்த ஓர் இந்திய எழுத்தாளர் மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சாளர் ஆவார். ஒரு நாத்திகன் கீதையைப் பெறுகிறான், கதை அல்ல போன்ற சிறந்த விற்பனையான புத்தகங்களை இவர் எழுதி வெளியிட்டுள்ளார். முதன்மையாக சுய உதவி மற்றும் ஆன்மீகம் பற்றிய நூல்களை எழுதுகிறார். 21 ஆம் நூற்றாண்டிற்கான மேலாண்மைக் கல்வியை வடிவமைப்பதிலும் தீவிரமாக உள்ளார். தற்போது உதய்பூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதன்மை கூட்டாண்மை ஆலோசனைக் குழுவில் பணிபுரிகிறார். சிங்கப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்துகிறார். மேலும் செய்ப்பூர் மேலாண்மை நிறுவனத்தின் கல்வி மன்ற குழு உறுப்பினராகவும் உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியைச் சேர்ந்த ராகுல், லக்னோவில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்காக சிங்கப்பூர் அரசுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து 100% உதவித்தொகை பெற்றார். சிங்கப்பூர் ஏர்லைன்சு மற்றும் நெப்டியூன் ஓரியண்ட் லைன்சு லிமிடெட் ஆகியவை உதவித்தொகை வழங்கிய நிறுவனங்களாகும்.

தொழில்[தொகு]

நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஒளியனியல் பொறியியலில் பட்டம் பெற்ற பிறகு, ஒரு முதலீட்டு வங்கியில் மேலாண்மை பயிற்சியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வட்டி விகித விருப்பத் தரகு தொழிலுக்கு மாறினார். ஓய்வு நேரத்தில் பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் முதுகலை வணிக மேலாண்மை படித்தார். இப்பட்டம் பெற்ற பின்னர், சிங்கப்பூரில் உள்ள செருமன் முதலீட்டு வங்கிகளில் பணியாற்றினார். வங்கிகளில் பணிபுரியும் போது இவர் தனது எழுத்து வாழ்க்கையைத் தொடங்கினார். சிங்கப்பூரில் வாழ்ந்த புலம்பெயர்ந்த இந்தியர்களில் தீவிர செயற்பாட்டாளராக இருந்தார். சிங்கப்புரிலுள்ள பெங்களுர் இந்திய மேலாண்மை நிறுவன முன்னாள் மாணவர் சங்கத்தின் இளைய தலைவராக உள்ளார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகத்தின் இந்திய முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்தார். [1]

இருபத்தியோராம் நூற்றாண்டில் தொழில், நனவான முதலாளித்துவம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த புரிதல் போன்றவை தொடர்பான தலைப்புகளில் நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து பேசி வருகிகிறார். புளோரிடாவில் உள்ள வைசுணவா ஆய்வுகள் நிறுவனம், பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனம், செய்ப்பூர் மேலாண்மை நிறுவனம், லக்னோ மேலாண்மை நிறுவனம், உதய்பூர் மேலாண்மை நிறுவனம் போன்ற பல்வேறு முன்னணி மேலாண்மை கல்வி நிறுவனங்களில் அழைப்பு விரிவுரையாளராக தொடர்ந்து அழைக்கப்பட்டும் வருகிறார்.[2] [3] [4] [5]

பிற பணிகள்[தொகு]

ஞானத்தை சனநாயகப்படுத்துவதை நோக்கமாகக் [6] கொண்டு பல்வேறு செயல்களில் ஈடுபடும் அமைப்பைத் துவக்கி இணை நிறுவனராக இயங்கிவருகிறார். ஏப்ரல் 2021 இல் இவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் ஆக்சிசன் இயக்கத்தை வழிநடத்தினார். இவ்வியக்கம் 1.3 கோடிக்கு மேல் திரட்டியது. 200 ஆக்சிசன் செறிவூட்டிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தியது. [7] [8] [9] [10] [11] [12] [13]

நூல் பட்டியல்[தொகு]

  • An Atheist Gets the Gita [14]
  • Engineering to Ikigai [15]
  • You know the glory, Not the story [16]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Singapore Universities Mission Oxygen (SUMO)". Milaap (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-07.
  2. "Guest Session: Mr Rahul Singh". IIM Nagpur. 2019-10-28. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  3. "IIMB VISTA Past Speakers". IIM Bangalore. Archived from the original on 2022-02-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  4. "An Atheist Gets the Gita". IIM Trichy. 2022-01-31. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  5. "Webinar: Extending a Helping Hand to India During the Pandemic". 2021-07-31. Archived from the original on 2022-02-03. பார்க்கப்பட்ட நாள் 2022-01-03.
  6. "Gyanalogy". Gyanalogy (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-01-01.
  7. "COVID-19: Alumni of Singapore universities launch crowdfunding drive". WION News (in ஆங்கிலம்). 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  8. "Singapore to provide crucial COVID-19 supplies to India". Economic Times. 2021-04-30. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  9. "Indian origin alumni of Singapore univs to help UP in pandemic times". Hindustan Times. 2021-05-05. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  10. "Helping virus-hit Indians breathe again". Tabla!. 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  11. "NUS Alumni raise S$235,000 within 15 days to save over 10,000 lives from COVID-19". NUS. 2021-04-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  12. "Extending a helping hand overseas". NTU. 2021-05-31. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  13. "COVID-19: Alumni of Singapore Universities launch Crowdfunding drive for oxygen concentrators to India". SMU. 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2022-02-03.
  14. "An Atheist Gets the Gita". Rupa Publications (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-14.
  15. "Engineering to Ikigai". Indus Publishers (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
  16. "You know the glory, Not the story". World Scientific (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராகுல்_சிங்&oldid=3723254" இலிருந்து மீள்விக்கப்பட்டது