இரவீந்தரா அருங்காட்சியகம்
Appearance
இரவீந்தரா அருங்காட்சியகம் (Rabindra Museum) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள காலிம்போங்கு மலை வாழிடத்திற்கு அருகில் அமைந்துள்ள முங்பூ நகரில் அமைந்துள்ளது. குயினைன் ஆய்வாளர் எம். எம். சென்னின் மனைவியும், கவிஞரும் நாவலாசிரியருமான மைத்ரேயி தேவியின் அழைப்பிற்கு இணங்கி, கவிஞர் இரவீந்தரநாத் தாகூர் 1938 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் இங்கு தங்கியிருந்தார் [1][2].
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் நாள் வீசிய புயலால் ஒரு மரம் விழுந்து அருங்காட்சியகம் பழுதடைந்தது [3]. .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Better India. This Little Known Himalayan Village Was the Much-Loved Summer Retreat of Rabindranath Tagore (19 July 2016).
- ↑ Mungpoo.org. Mungpoo and Kabi Guru Rabindranath Tagore, Museum.
- ↑ Briefs - Rabindra museum damaged( பரணிடப்பட்டது 2012-11-02 at the வந்தவழி இயந்திரம்)