இரவித் கெல்லெடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரவித் கெல்லெடு
Ravit Helled
RavitHelled.jpg
கெல்லெடு, 2013 பிப்ரவரி
பிறப்பு1980 (அகவை 39–40)
வாழிடம்இசுரவேல்]], சுவிட்சர்லாந்து
துறைகோள் அறிவியல்
அறியப்படுவதுInvestigation of the composition of giant gas planets in the model of disk instability, investigation of the relationship between the rotation time of planets and their composition and internal structure, assessment of the rotation period of Saturn
விருதுகள்2015 இல் இசுரவேலின் போர்பெசு பட்டியலில் மிகவும் தாக்கம் மிக்க 50 பெண்களில் 41 ஆம் தரவரிசையில் 41 ஆவதாக கெல்லெடு அமைகிறார்[1]

இரவித் கெல்லெடு ஈதா (Ravit Helled Ita) (பிறப்பு: 1980) ஓர் இசுரவேல் கோள் அறிவியலாளர் ஆவார். இவர் தெல் அவீவ் பல்கலைக்கழக புவியியல் துறை இணைப் பேராசிரியர் ஆவார். இவர் சூரிச்சு பல்கலைக்கழகத்தில் வானியற்பியல், அண்டவியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.[2] இவர் சூரியக் குடும்ப வளிமக் கோள்களையும் புறவெளிக் கோள்களையும் ஆய்வு செய்கிறார். இவர் வியாழனை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட ஆய்வுக் கலமாகிய யூனோ விண்கல ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர் ஆவார். இவர் வீசுமன் அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த எலி காலந்தி, யோகை காசுபியுடன் இணைந்து 2015 இல் துல்லியமாக காரிக்கோளின் சுழற்சி அலைவுநேரத்தைக் கண்டுபிடித்தார். இவர் 2015 இல் இசுரவேலின் போர்பெசு பட்டியலில் மிகவும் தாக்கம் மிக்க 50 பெண்களில் 41 ஆம் தரவரிசையில் 41 ஆவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

வாழ்க்கை[தொகு]

இவர் 2004 இல் தெல் அவீவ் பல்கலைக்கழகத்தில் தன் இளம் அறிவியல் பட்டத்தை முடித்தார். இவர் அதே பல்கலைகழகத்தில் முனைவர் பட்டத்தை 2007 இல் முடித்தார். இவரது முனைவர் பட்ட ஆய்வு பெருங்கோள் உருவாக்கம் பற்றியதாகும்.

இவர் 2007 முதல் 2009 வரை இலாசு ஏஞ்சலீசு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர் ஆய்வை கோள் அறிவியல் துறையில் செய்தார். இவர் 2009 இல் அங்கே ஆராய்ச்சி உறுப்பினராகச் சேர்ந்தார். இவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, வளிமப் பெருங்கோள் உருவாக்கத்தில் சிறுகோள்களின் தாக்கத்தை வைத்து சூரியக் குடும்ப வளிமப் பெருங்கோள்களின் படிமங்களை உருவாக்கினார்.[3]

இவர் 2011 இல் தெல் அவீவ் பலகலிக்கழகப் புவியியல் புலங்கள் துறையில் முதுநிலை விரிவுரையாளராக பணி அமர்த்தப்பட்டார். இவர் 2015 இல் புவியியல் புலங்கள் துறையின் இணைப் பேராசிரியரானார்.[4] இவர் 2016 இல் சூரிச்சு பல்கலைக்கழக ஆராய்ச்சிக் குழுவில் சேர்ந்தார்.

ஆராய்ச்சி[தொகு]

கோள் உருவாக்கம்[தொகு]

கோள்களின் உட்கட்டமைப்பும் அகச் சுழற்சி நேரமும்[தொகு]

யுரேனசிலும் நெப்டியூனிலும் காற்றுவீச்சுக்கான தடைகள்[தொகு]

காரிக்கோளின் சுழற்சி நேரத்தைக் கணித்தல்[தொகு]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

  • Ravit Helled, John D Anderson, Gerald Schubert, Morris Podolak, Interior Models of Uranus and Neptune The Astrophysical Journal 726 (1), 15 (9 December 2010) DOI: 10.1088/0004-637X/726/1/15
  • Ravit Helled et al., Giant Planet Formation, Evolution, and Internal Structure, Protostars and Planets VI, Henrik Beuther, Ralf S. Klessen, Cornelis P. Dullemond, and Thomas Henning (eds.), University of Arizona Press, Tucson, 914 pp., p. 643-665, DOI: 10.2458/azu_uapress_9780816531240-ch028, arXiv:1311.1142 [astro-ph.EP]
  • Ravit Helled, Gerald Schubert, Core Formation in Giant Gaseous Protoplanets, Astrophysics (astro-ph), DOI: 10.1016/j.icarus.2008.08.002, arXiv:0808.2787 [astro-ph]
  • Ravit Helled, Eli Galanti, Yohai Kaspi. Saturn’s fast spin determined from its gravitational field and oblateness. Nature 520, 202–204 (09 April 2015); DOI: 10.1038/nature14278
  • Ravit Helled, Jonathan Lunine, Measuring Jupiter's water abundance by Juno: The link between interior and formation models, Monthly Notices of the Royal Astronomical Society. 03/2014; 441(3). DOI: 10.1093/mnras/stu516

விருதுகளும் தகைமைகளும்[தொகு]

  • 2015 இல் இசுரவேலின் போர்பெசு பட்டியலில் மிகவும் தாக்கம் மிக்க 50 பெண்களில் 41 ஆம் தரவரிசையில் 41 ஆவதாக கெல்லெடு தேர்ந்தெடுக்கப்பட்டார்[1][5]
  • 2016 இல் இசுரவேலின் குளோபெசு பட்டியலில் மிகவும் தாக்கம் மிக்க 50 பெண்களில் ஒருவராகக் கெல்லெடு தேர்ந்தெடுக்கப்பட்டார் [6]
  • 2016 இல் இசுரவேலின் குளோபெசு பட்டியலில் மிகவும் தாக்கம் மிக்க 40 இளைஞரில் பெண்களில் ஒருவராகக் கெல்லெடு தேர்ந்தெடுக்கப்பட்டார் [7]
  • கெழ்செத் ஊடக மேக்கொ களம் இவரை இசுரவேலிலேயே பெருந்தாக்கம் செலுத்தும் ஒருவராக 2016 இல் தேர்வு செய்துள்ளது [8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

From her lectures

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவித்_கெல்லெடு&oldid=2719071" இருந்து மீள்விக்கப்பட்டது