இரயணா பாக்ய லட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரயணா பாக்கிய லட்சுமி
Rayana Bhagya Lakshmi
விஜயவாடா மாநகரத் தந்தை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
11 மார்ச் 2021
முன்னவர் கொனேரு ஸ்ரீதர்
தனிநபர் தகவல்
பிறப்பு அண். 1983
அரசியல் கட்சி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பணி
  • அரசியல்வாதி
  • தொழிலதிபர்

இரயணா பாக்ய லட்சுமி (Rayana Bhagya Lakshmi) 1983ஆம் ஆண்டு இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தார். இவர் ஓர் அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர் ஆவார்.[1] லெட்சுமி தற்போது விஜயவாடாவின் 12வது மேயராக பணியாற்றி வருகிறார். லட்சுமி, ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினைச் சார்ந்தவர்.

தொழில்[தொகு]

2021ஆம் ஆண்டு விஜயவாடா மாநகராட்சி தேர்தலில் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக லட்சுமி போட்டியிட்டார். பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 46வது நகராட்சி பிரிவிலிருந்து முதன் முறையாக மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்ச் 18, 2021 அன்று, விஜயவாடாவின் 12வது மேயராக, இரயணா பாக்ய லட்சுமி பொறுப்பேற்றார். இவர் நகரத்தின் ஐந்தாவது பெண் மேயரும் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரயணா_பாக்ய_லட்சுமி&oldid=3178718" இருந்து மீள்விக்கப்பட்டது