இரமேஷ் சந்திரா (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரமேஷ் சந்திரா
Ramesh Chandra.jpg
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்கே. இரமேஷ்
பிறப்பு1963 (அகவை 58–59)
மங்களூர், தெற்கு கன்னட மாவட்டம், இந்தியா
தொழில்(கள்)
இசைத்துறையில்1995 – தற்போது வரை
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
இசைக்கருவி(கள்)குரலிசை
வெளியீட்டு நிறுவனங்கள்சுயாதீனக் கலைஞர்

இரமேஷ் சந்திரா (Ramesh Chandra) கன்னடத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணியாற்றும் ஒரு இந்திய பின்னணிப் பாடகர் ஆவார்.[1][2][3] இவர் இரண்டு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றவர்.

சொந்த வாழ்க்கை[தொகு]

ரமேஷ் சந்திரா மங்களூரில் கே.ரமேஷாகப் பிறந்து காசர்கோட்டில் வளர்ந்தார். இவர் கே. ஜே. யேசுதாஸ் பாடல்களை வானொலியில் கேட்டு வளர்ந்தார். இவர் கல்மாடி சதாசிவ ஆச்சாரிடம் இசைப் பயிற்சினை மேற்கொண்டார். காசர்கோட்டில் அனைவராலும் அறியப்பட்ட ஒரே கர்நாடக இசைக்கலைஞராக இருந்தார்.[4]

இவர், சந்திரா ஜோதி என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[4]

தொழில்[தொகு]

இரமேஷின் இசை மீதான ஆர்வம் இவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றது, இவர் கன்னடப் பாடகர் ஜி. வி. அத்ரி நடத்தி வந்த சாதனா இசைப் பள்ளியில் சேர்ந்தார். இரமேஷ் மேடை நிகழ்ச்சிகளிலும் பாடத் தொடங்கினார். ராஜ்குமார், எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. ஜே. யேசுதாஸ் ஆகியோரின் பாடல்களை மேடையில் பாடினார். இசையமைப்பாளர் வி.மனோகருக்கான இவரது "ஓ மல்லிகே நின்னொந்திகே" என்ற பாடல் 1995 ஆம் ஆண்டு அனுராக சங்கமா திரைப்படத்தில் பாடினார். இது இவரது முதல் திரைப்பட பாடலாக அமைந்தது. இந்தப் பாடலுக்காக இவர் தனது முதல் மாநில விருதைப் பெற்றார். [4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]