இரத்த ஒட்டுண்ணி நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்த ஒட்டுண்ணி நோய்
Photomicrograph of Giemsa-stained Trypanosoma cruzi
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புinfectious diseases, ஒட்டுண்ணியியல்
ஐ.சி.டி.-10B57.
ஐ.சி.டி.-9086
நோய்களின் தரவுத்தளம்13415
மெரிசின்பிளசு001372
ஈமெடிசின்med/327
பேசியண்ட் ஐ.இஇரத்த ஒட்டுண்ணி நோய்
ம.பா.தD014355

இரத்த ஒட்டுண்ணி நோய் (Chagas disease), அல்லது அமெரிக்கன் டிரைபநோசோமியாசிஸ் , என்பது ஒரு வெப்ப மண்டலம் சார்ந்த ஒட்டுண்ணி நோய். இந்த நோய் வர காரணம் டிரைபநோசோமா க்ரூசி என்ற ஓரணு உயிரி.[1] பெரும்பாலும் இந்த நோய் பரவ காரணம் முத்தமிடும் பூச்சி என அழைக்கப்படும் ஒரு வித நாவாய்பூச்சி.[1] நோய் தொற்று அறிகுறிகள் தொற்று காலத்தில் மாறிக்கொண்டே இருக்கும். பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது மிதமாக இருக்கலாம், காய்ச்சல், வீங்கிய வடிநர்க்கணு, தலைவலி, அல்லது கடித்த பகுதியில் வீக்கம் என்பவை அறிகுறிகளில் அடங்கும்.[1] 8-12 வாரங்களுக்கு பிறகு நோய் தாக்கப்பட்ட நபர்கள் நாள்பட்ட நோய்நிலைக்கு மாறுவார்கள், ஆனால் 60–70% நபர்களுக்கு நோய் அறிகுறிகள் மேலும் அதிகரிக்காது.[2][3] மீதமுள்ள 30 முதல் 40% நபர்களுக்கு, ஆரம்ப கட்ட தொற்றுக்கு பிறகு 10 முதல் 30 ஆண்டுகளுக்கு பிறகே நோய் தொற்று தெரிய வரும்.[3] இதில் இதய கீழறை பெருக்கமும் அடங்கும், அது [[இதய செயலிழப்பு] க்கு காரணமாகும்].[1] உணவு குழாய் பெருக்கம் அல்லது பெருங்குடல் பெருக்கம் கூட 10 % நபர்களை பாதிக்கிறது.[1]

காரணம் மற்றும் நோய் அறிதல்[தொகு]

டி. க்ரூசி பொதுவாக மனிதர்களுக்கும் இதர பாலூட்டிகளுக்கும் பரவ காரணம் இரத்தம்-உறிஞ்சும் " முத்தமிடும் பூச்சி " யின் உட்குடும்பத்தை சேர்ந்த டிரியடோமினேதான்.[4] இந்த பூச்சிகள் பல பெயர்களில் பல பகுதிகளில் அறியபடுகின்றன: அர்ஜன்டீனா ,பொலீவியா,சிலி மற்றும் பராகுவே பகுதிகளில் வின்சுகா என்றும், பிரேசிலில் பார்பெரோ (பார்பர்) என்றும், கொலம்பியாவில் பிட்டோ என்றும் மத்திய அமெரிக்காவில் சிஞ்சே என்றும் வெனிசுலாவில் சிபோ என்றும் அறியபடுகின்றன. இரத்தம் செலுத்துதல், உறுப்பு மாற்றம் செய்தல், ஒட்டுண்ணிகளால் அசுத்தமாக்கபட்ட உணவை உண்ணுதல், மற்றும் தாயிடமிருந்து கருவிற்கு போன்ற பல்வேறு முறைகளிலும் இந்த நோய் பரவலாம்.[1] ஆரம்ப கட்ட நோய் நிலையை, ஒட்டுண்ணிகள் இரத்தத்தில், இருப்பதை நுண்ணோக்கி மூலம் கண்டறிந்து உறுதி செய்யபடுகிறது.[3] இரத்ததில் டி. க்ரூசி க்கான நோய் நுண்ம எதிரி இருப்பதை வைத்து நாள்பட்ட நோய் கண்டறியபடுகிறது.[3]

தடுப்பு மற்றும் சிகிச்சை[தொகு]

இந்த நோய்க்கான தடுப்பு என்பது பெரும்பாலும் முத்த பூச்சிகளை ஒழிப்பதும் அதன் கடிக்கு ஆளாகாமல் இருப்பதும் தான்.[1] வேறுவித தடுப்பு முறையென்றால் இரத்த மாற்றதிற்கு பயன்படுத்தும் இரத்தத்தை பிரித்தறியும் சோதனை செய்து பயன்படுத்துவதை சொல்லலாம்..[1] 2103 2013 ஆம் ஆண்டு வரை இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கபடவில்லை.[1] ஆரம்ப கட்ட நோய்நிலையை,பென்சினாடசோல் அல்லது நிஃபார்டிமோக்ஸ் போன்ற மருந்துகள் கட்டுபடுத்தும்.[1] ஆரம்ப நிலையிலயே இந்த மருந்துகள் கொடுக்கபட்டால் ஏறக்குறைய இந்த நோயை குணபடுத்த முடியும்,ஆனால் வெகு நாட்களாக இந்த நோயால் பாதிக்கபட்ட நபர்களுக்கு இந்த மருதுகளால் நிவாரணம் கிடைக்கவில்லை.[1] நாள்பட்ட நோய்வாய்பட்டவருக்கு இந்த மருந்து இறுதி கட்ட நோய்நிலைய எட்டுவதை தாமாதபடுத்தலாம் அல்லது தடுக்கலாம்..[1] பென்சினாடசோல் மற்றும் நிஃபார்டிமோக்ஸ், 40 % நோயாளிகளுக்கு சரும வியாதிகள், மூளை நச்சுத்தன்மை மற்றும் செரிமான மண்டல எரிச்சல் போன்ற சில தற்காலிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.[1][2][5][6]

நோய்ப்பரவு இயல்[தொகு]

பெரும்பாலும் மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் 70 லிருந்து 80 லட்சம் மக்களுக்கு இரத்த ஒட்டுண்ணி நோய் உள்ளதாக மதிப்பிடபட்டுள்ளது.[1] 2006 வரை இந்த நோயினால் ஆண்டுக்கு சுமார் 12,500 நபர்கள் இறந்துள்ளார்கள்.[2] பெரும்பாலும் இந்த நோய்க்கு ஆளானவர்கள் ஏழை மக்களாவர்.[2] மேலும் இந்த நோயினால் பாதிக்கபட்ட பெரும்பாலான நபர்களுக்கு இந்த நோய் இருப்பது தெரிந்திருக்கவில்லை.[7] பெரிய அளவிலான மக்கள் நகர்வுகள், இரத்த ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகரித்துள்ளது. தற்பொழுது ஐரோப்பாவும் அமெரிக்காவும் கூட இதில் அடங்கும்.[1] 2014 வரை இந்த பகுதிகளிலும் இந்த நோய் பாதிப்பு அதிகரிதுள்ளது.[8] முதன் முதலில் 1909 ஆம் ஆண்டு கார்லோஸ் சகாஸ் என்பவரால் இந்த நோய் கண்டுபிடிக்கபட்டது,அதனால் இந்த நோய் சகாஸ் நோய் என்று அவரது பெயராலயே ஆங்கிலத்தில் அறியபடுகிறது.[1] இந்த நோய் 150 க்கும் மேற்பட்ட மற்ற விலங்குகளையும் பாதிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 "Chagas disease (American trypanosomiasis) Fact sheet N°340". World Health Organization. March 2013. பார்க்கப்பட்ட நாள் 23 February 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Rassi A, Rassi A, Marin-Neto JA (April 2010). "Chagas disease". Lancet 375 (9723): 1388–402. doi:10.1016/S0140-6736(10)60061-X. பப்மெட்:20399979. 
  3. 3.0 3.1 3.2 3.3 Rassi A, Jr; Rassi, A; Marcondes de Rezende, J (June 2012). "American trypanosomiasis (Chagas disease).". Infectious disease clinics of North Americஉa 26 (2): 275–91. doi:10.1016/j.idc.2012.03.002. பப்மெட்:22632639. 
  4. "DPDx – Trypanosomiasis, American. Fact Sheet". Centers for Disease Control (CDC). பார்க்கப்பட்ட நாள் 12 May 2010.
  5. Bern C, Montgomery SP, Herwaldt BL, et al. (November 2007). "Evaluation and treatment of chagas disease in the United States: a systematic review". JAMA 298 (18): 2171–81. doi:10.1001/jama.298.18.2171. பப்மெட்:18000201. 
  6. Rassi A, Dias JC, Marin-Neto JA, Rassi A (April 2009). "Challenges and opportunities for primary, secondary, and tertiary prevention of Chagas' disease". Heart 95 (7): 524–34. doi:10.1136/hrt.2008.159624. பப்மெட்:19131444. http://heart.bmj.com/cgi/pmidlookup?view=long&pmid=19131444. 
  7. Capinera, John L., தொகுப்பாசிரியர் (2008). Encyclopedia of entomology (2nd ed. ). Dordrecht: Springer. பக். 824. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402062421. http://books.google.ca/books?id=i9ITMiiohVQC&pg=PA824. 
  8. Bonney, KM (2014). "Chagas disease in the 21st Century: a public health success or an emerging threat?". Parasite 21: 11. doi:10.1051/parasite/2014012. பப்மெட்:24626257.  open access publication - free to read
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த_ஒட்டுண்ணி_நோய்&oldid=2747093" இலிருந்து மீள்விக்கப்பட்டது