இரணகாதேவி
இரணகாதேவி (Ranakadevi) மேற்கு இந்தியாவின் சௌராஷ்டிரா பகுதியின் சூடாசமா ஆட்சியாளரான கெங்கரா வம்சத்தின் 12 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இராணி ஆவார். சூடாசம மன்னர் கெங்கரா மற்றும் சோலாங்கிப் பேரரசின் மன்னர் ஜெயசிம்ம சித்தராஜா ஆகியோருக்கு இடையே நடந்த போரைக் குறிக்கும் பார்டிக் சோகமான காதல் கதையில் இவர் குறிப்பிடப்படுகிறார். இருப்பினும், இந்த புராணக்கதை நம்பகமானதாக இல்லை.
இரணகாதேவியின் புராணக்கதை
[தொகு]இரணகாதேவி, சுடாசமாவின் தலைநகரான ஜூனாகத்திற்கு அருகிலுள்ள மஜேவாடி கிராமத்தைச் சேர்ந்த குயவனின் மகள். இவரது அழகின் புகழ் ஜெயசிம்மனை அடைய, அவன் இவரை மணந்து கொள்ள முடிவெடுத்தான்., கெங்கரா இரணகா தேவியின் திருமணம் ஜெயசிம்காவை ஆத்திரமடையச் செய்தது. [1] [2] இதே கதையின் மற்றொரு வடிவமானது இரணகாதேவி கட்ச் மன்னருக்கு பிறந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால், ஜோதிடர் இவரைத் திருமணம் செய்துகொள்பவர் தனது அரசினை இழந்து இளமையிலேயே இறந்துவிடுவார் என்று கணித்ததால் காட்டில் கைவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கைவிடப்பட்ட குழந்தை ஹத்மத் அல்லது ஜாம் ராவல் என்ற குயவரால் கண்டுபிடிக்கப்பட்டது, அவர் இரணகாதேவியைத் தனது சொந்த மகளாக வளர்த்தார். [3] இதற்கிடையில், கெங்கரா மால்வாவிற்கு ஒரு பயணத்தில் இருந்தபோது ஜெயசிம்ஹாவின் தலைநகரான அனாஹிலபடகாவின் (இப்போது பதான்) வாயில்களைத் தாக்கி உடைத்தார், இது ஜெயசிம்மாவை மேலும் கோபப்படுத்தியது.
கெங்கரா ஜூனாகத்தில் உள்ள உபர்கோட் கோட்டையில் தனித்துத் தங்கியிருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், ஆனால் தனது ராணி இரணகாதேவியை ஜூனாகத்திற்கு அருகிலுள்ள கிர்னார் மலைக்கோட்டையில் உள்ள தனது அரண்மனையில் வைத்திருந்தார். காவலரைத் தவிர அவரது மருமகன்கள் விசால் மற்றும் தேசால் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். கெங்கரா இரணகாதேவியை தரிசிக்க உபர்கோட்டில் இருந்து கிர்னார் கோட்டைக்கு செல்வது வழக்கம். ஒரு நாள் அவர் தேசால் குடிபோதையில் இருப்பதைக் கண்டார், அவருடைய அனைத்து எதிர்ப்புகளையும் மீறி, அவளுடன் முறையற்ற நெருக்கம் இருப்பதாக குற்றம் சாட்டினார். பின்னர் அவர் தேசால் மற்றும் விசால் இருவரையும் ஜுனாகத்தில் இருந்து வெளியேற்றினார்.
அவர்கள் ஜெயசிம்மாவிடம் சென்று ஜூனாகத்தைத் தாக்கச் சொன்னார்கள். தானியங்களை எடுத்துச் சென்ற சில கால்நடைகளுடன் உபர்கோட்டில் நுழைந்து காவலர்களைக் கொன்று அரண்மனையைத் தாக்கினர். கெங்கரா வெளியே வந்து போரில் இறந்தார், உபர்கோட் கைப்பற்றப்பட்டது. இதற்குப் பிறகு தேசலும் விசாலும் ஜெயசிம்மனை கிர்னார் கோட்டைக்கு அழைத்துச் சென்று தங்கள் அத்தை ராணி இரணகாதேவியை வாயிலைத் திறக்கச் சொன்னார்கள். என்ன நடந்தது என்று தெரியாமல் அப்படியே செய்தார். பின்னர் ஜெயசிம்மன் உள்ளே நுழைந்து, இரணகாதேவியின் இரண்டு மகன்களைப் பார்த்ததும், அவர்களைக் கொல்லும்படி கட்டளையிட்டார். ஜெயசிம்மன் இரணகாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு அனாஹிலபாதகத்தை நோக்கித் திரும்பினான். [4]
அவர்கள் செல்லும் வழியில், போகாவோ நதிக்கரையில் உள்ள வர்தமானபுரத்தில் (இப்போது வாத்வான் ) இரணகாதேவியின் உன்னதமான தாங்குதலால் வென்று, அவளை தனது முதல் இராணியாக்க முன்வந்தான், ஆனால், இரணகாதேவி தனது கணவர் மற்றும் அப்பாவிச் சிறுவர்களின் மரணத்தை மன்னிக்க முடியாது என்று அவனிடம் கூறினாள். பின்னர் அவள் ஜெயசிம்மனை சபித்து, குழந்தை இல்லாமல் இறக்க வேண்டும் என்று எச்சரித்தாள். பின்னர், அவர் தனது கணவரின் இறுதிச் சடங்கில், அவரது மடியில் தலைப்பாகையுடன் தன்னைத் தானே எரித்துக்கொண்டு சதி என்னும் வழக்கத்தை நிறைவேற்றினார். இவருடைய சாபம் நிறைவேறி ஜெயசிம்மன் குழந்தையில்லாமல் இறந்தான்.[5]
பார்டிக் கணக்குகளில் இரணகாதேவியால் சொல்லப்பட்ட பல சோரதாக்கள் (ஜோடிகள்) சோகத்தைத் தூண்டுகின்றன, ஆனால் வரலாற்றுப் பொருளாக அவற்றின் பயன் சந்தேகத்திற்குரியது. ரணகாதேவி இருப்பது கூட சந்தேகம்தான். புராதனா-பிரபந்த-சங்கிரஹா அல்லது மெருதுங்காவின் பிரபந்த-சிந்தாமணி போன்ற சௌலுக்கிய கால சரித்திரங்களில் ரணகாதேவி குறிப்பிடப்படவில்லை, மாறாக அவை முறையே சோனாலாதேவி மற்றும் சுனாலாதேவி என்ற பெயரை வழங்குகின்றன. கெங்கராவின் மரணத்திற்குப் பிறகு சோனாலாதேவியால் சொல்லப்பட்ட அபப்ரம்ச வசனங்கள் முறையே பதினொன்றாகவும் எட்டு ஆகவும் உள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Parikh, Rasiklal C. (1938). "Introduction". Kavyanushasana by Acharya Hemachandra. Vol. II Part I. Bombay: Shri Mahavira Jaina Vidyalaya. pp. CLXXVIII–CLXXXIII.
- ↑ Campbell, James Macnabb (1896). Gazetteer Of The Bombay Presidency: History of Gujarat. Vol. I. Part I. Bombay: The Government Central Press. pp. 175–177.
- ↑ Pai. Ranak Devi. Amar Chitra Katha Pvt Ltd.
- ↑ Alaka Shankar (2007). "Ranak Devi". Folk Tales Of Gujarat. Children's Book Trust. pp. 43–49.
- ↑ Poonam Dalal Dahiya. ANCIENT AND MEDIEVAL INDIA EBOOK. MGH.