இரட்டை-ஆற்றல் எக்சு-கதிர் உறிஞ்சுமையளவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டை-ஆற்றல் எக்சு-கதிர் உறிஞ்சுமையளவியல்
Dual-energy X-ray absorptiometry
OPS-301 குறி:3-900

இரட்டை-ஆற்றல் எக்சு-கதிர் உறிஞ்சுமையளவியல் (Dual-energy X-ray absorptiometry, டெக்சா, DXA, முன்னர் DEXA[1]) என்பது நிறமாலைப் படிமவியலைப் பயன்படுத்தி எலும்பின் கனிமப்பொருள் அடர்த்தியை (BMD) அளவிடும் முறையாகும். வெவ்வேறு ஆற்றல் மட்டங்களைக் கொண்ட இரண்டு எக்சு-கதிர்கள் நோயாளியின் எலும்புகளுக்குள் செலுத்தப்படுகின்றன. மென் திசு உறிஞ்சுதல் வெளியகற்றப்படும் போது, ஒவ்வொரு கற்றையையும் எலும்பு உறிஞ்சுவதிலிருந்து எலும்பின் கனிமப்பொருள் அடர்த்தி கணிக்கப்படுகிறது. இம்முறை எலும்பு அடர்த்தி அளவீட்டுத் தொழிநுட்பத்தில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

டெக்சா ஊடறிதல் பொதுவாக எலும்புப்புரை நோயைக் கண்டறிந்து, அதனைப் பின்பற்றப் பயன்படுகிறது. இதற்கு மாறாக அணுக்கரு எலும்பு ஊடறிதல் எலும்புகளின் சில வளர்சிதை மாற்ற நோய்களுக்கு உணர்திறன் கொண்டது, இதன் போது எலும்புகள் நோய்த்தொற்றுகள், எலும்பு முறிவுகள் அல்லது கட்டிகளிலிருந்து குணமடைய முயல்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டெக்சா
என்பதின் ஊடகங்கள் உள்ளன.