இரட்டைச் சூட்டடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரட்டைச் சூட்டடுப்பு அல்லது கொடியடுப்பு என்பது குறைந்த விறகுடன் கூடிய பலனைத் தரக்கூடிய ஒரு அடுப்பு வடிவமைப்பு ஆகும். தமிழகத்தில் நீண்ட காலமாக புழக்கத்திலிருந்த இந்த அடுப்பினை ஈழப் போராட்டத்தின் போது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட காலப் பகுதியில் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தினர் அறிமுகப்படுத்தினார்கள்.[1]

வடிவமைப்பு[தொகு]

இரட்டைச் சூட்டடுப்பு

இரண்டு பாத்திரம் வைத்துச் சமைக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். இரட்டைச் சூட்டடுப்பு என்றழைக்கப்பட்ட இந்த அடுப்பு ஒருபுறம் விறகு வைத்து எரித்தால் பக்க இணைப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மற்றொரு அடுப்பிலும் நெருப்பு வரக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. விழுத்த விழுத்த எழுவோம்
  2. யாழ்ப்பாண வாழ்வியலில் போர்க்காலத் தொழிநுட்பங்கள்