இரகுநாத் வித்தல் கேத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரகுநாத் வித்தல் கேத்கர் (Raghunath Vithal Khedkar)(பிறப்பு 1873) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் மும்பையில்[1] பிறந்த இந்திய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் 1959-ல், இவரது தந்தை வித்தல் கிருஷ்ணாஜி கேத்கர் எழுதிய வரலாற்றுப் படைப்பான தி டிவைன் கெரிட்டேஜ் ஆப் யாதவாசு (யாதவர்களின் தெய்வீக மரபு) எனும் நூலைத் திருத்தி, விரிவாக வெளியிட்டார்.

கேத்கர் ஐக்கிய இராச்சியத்தில் எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பயின்றார். முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்பு நியூகாசில்-ஆன்-டைனில் மருத்துவப் பயிற்சி செய்தார். மேலும் பம்பாய், கோலாப்பூர் மற்றும் நேபாளத்தில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியுள்ளார்.[2] இளம் வயதில் கேத்கரின் இலண்டனின் வெப்பமண்டல மருத்துவ மற்றும் சுகாதார சமூகம் மற்றும் சுகாதாரம் மற்றும் அரச சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.[3] 1920ஆம் ஆண்டில், சவுத்பரோ குழுவிற்குப் பதிலளிக்கும் விதமாக, கேத்கர், யாதவ் கவ்லிசுகளை மராட்டியர்களாக அங்கீகரிப்பதற்காகப் பிரச்சாரம் செய்தார். இவர்கள் கிருஷ்ண வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், சத்திரிய பழக்கவழக்கங்களைப் பராமரித்தல் மற்றும் மராட்டியப் படைப்பிரிவுகளில் பணியாற்றினர் என்று தெரிவித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Christophe Jaffrelot (2003). India's silent revolution: the rise of the lower castes in North India. Columbia University Press. pp. 163–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-12786-8. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  2. M. S. A. Rao (1972). Tradition, rationality, and change: essays in sociology of economic development and social change. Popular Prakashan. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
  3. Ralph Louis Woods (1947). The world of dreams, an anthology: the mystery, grandeur, terror, meaning and psychology of dreams. Random House. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.