இயோசியாகி அராட்டா
Appearance
இயோசியாகி அராட்டா Yoshiaki Arata | |
---|---|
இயோசியாகி அராட்டா | |
பிறப்பு | கியோத்தோ நகரிய மாநிலம், சப்பான் | 22 மே 1924
இறப்பு | 5 சூன் 2018 | (அகவை 94)
வாழிடம் | சப்பான் |
தேசியம் | சப்பான் |
துறை | குளிர் இணைவு |
பணியிடங்கள் | ஒசாக்கா பல்கலைக்கழகம் |
விருதுகள் | சப்பானின் கலாச்சார விருது |
இயோசியாகி அராட்டா (Yoshiaki Arata) சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். சப்பானில் அணுக்கரு இணைவுக்கான முன்னோடி ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு மே மாதம் 22 அன்று இவர் பிறந்தார். [1][2] – 5 June 2018}}[3][4][5] அராட்டா ஒசாகா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். [6] இவர் ஒரு வலுவான தேசியவாதி என்றும் கூறப்படுகிறது, சப்பானியர்களை பற்றி மட்டுமே பொதுவில் இவர் பேசிக்கொண்டிருந்தார். [5] சப்பான் அரசு அராட்டாவிற்கு 2006 ஆம் ஆண்டு கலாச்சார விருதை வழங்கி சிறப்பித்தது. [7]
அராட்டா தனது சகாவான யூ சாங் யாங்குடன் சேர்ந்து 1998 ஆம் ஆண்டு குளிர் இணைவு துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அக்கட்டுரைகளை வெளியிடவும் தொடங்கினார். [8]
2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 அன்று இவர் காலமானார்.
வெளியீடுகள்
[தொகு]- Y. Arata and Y. C. Zhang. "Achievement of intense 'cold' fusion reaction," Proceedings of the Japanese Academy, series B, 1990. 66:l.
- Y.Arata. Patent Application US 2006/0153752 A
மேலும் படிக்க
[தொகு]- Japan's "Cold fusion" Effort Produces Startling Claims of Bursts of Neutrons", Wall Street Journal, 4 December 1989
- "New life for cold fusion?" New Scientist, 9 December 1989, p. 19
- N. Wada and K. Nishizawa, "Nuclear fusion in solid", Japanese Journal of Applied Physics, 1989, 28:L2017
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.geocities.jp/aratacenter/Arata.html
- ↑ https://www.sponky.net/?p=1922
- ↑ https://mainichi.jp/articles/20180607/k00/00m/060/072000c
- ↑ https://www.nikkei.com/article/DGXMZO3144586006062018AC8000/
- ↑ 5.0 5.1 "La rivincita del Samurai" (in Italian). Il Sole 24 Ore. 22 May 2008. http://www.ilsole24ore.com/art/SoleOnLine4/Tecnologia%20e%20Business/2008/05/samurai-caravita.shtml?uuid=1af305be-2804-11dd-9bec-00000e25108c&DocRulesView=Libero.
- ↑ Ludovica Manusardi Carlesi (22 May 2008). "Nucleare, la fusione fredda funziona" (in Italian). Il Sole 24 Ore. http://www.ilsole24ore.com/art/SoleOnLine4/Tecnologia%20e%20Business/2008/05/nucleare-fusione-fredda.shtml?uuid=d215abee-2803-11dd-9bec-00000e25108c.
- ↑ Arata receives award from Emperor of Japan
- ↑ "Cold fusion success in Japan gets warm reception in India". Thaindian News. 2008-05-27. http://www.thaindian.com/newsportal/sci-tech/cold-fusion-success-in-japan-gets-warm-reception-in-india_10053182.html.