இயேசு கோட்டை
இயேசு கோட்டை | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
இடம் | மொம்பாசா , கென்யா |
இயேசு கோட்டை கென்யா நாட்டின் மொம்பாசா தீவில் அமைந்துள்ளது. இக்கோட்டையை வடிவமைத்தவர் இத்தாலிய நாட்டு கட்டிடக் கலை வல்லுர் ஜியோவானி பாட்டிஸ்டே கைராட்டி ஆவார். இது 1593 மற்றும் 1596 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது.
போர்த்துகல் நாட்டு மன்னர் கிங் பிலிப்பின் கட்டளையால், மொம்பசாவின் பழைய துறைமுகத்தை பாதுகாக்க கட்டப்பட்டது. சுவிஸ் கோஸ்ட்டில் போர்த்துகீசியர்களால் நிர்வகிக்கப்படும் ஒரே கோட்டையாக இயேசு கோட்டை இருந்தது. மேலும் இந்திய பெருங்கடல் வர்த்தகத்தின் மீதான செல்வாக்கை நிறுவ ஒரு மேற்கத்திய வல்லரசின் முதல் வெற்றிகரமான முயற்சியின் ஒரு சான்றாக இதுஅங்கீகரிக்கப்பட்டது.
இன்றைய இயேசுக் கோட்டை
[தொகு]இயேசு கோட்டை இப்போது வெளிநாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகள் ஒரு பிரபலமான இடமாக உள்ளது. பல சுற்றுலாத் தலங்கள், பாதுகாப்பு ஆய்வகம், கல்வித் துறை, பழைய டவுன் கன்சர்வேஷன் அலுவலகம் இணைந்து, முக்கிய சுற்றுலா அம்சமாக இந்த கோட்டை முக்கியத்துவம் பெறுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இக்கோட்டைய உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது. [1]
-
Building inside the fort
-
Windows of the inner buildings
-
Juxtaposition of decayed and survived
-
Obvious influence of Portuguese architecture