இயிங்போ லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயிங்போ லாகசு (Jingpo Lacus ) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் ஐதரோகார்பன் ஏரிகளில் ஒன்றாகும்[1] இதுவும் இதே அளவில் காணப்படும் ஒண்டாரியோ லாகசும் டைட்டனில் உள்ள மிகப்பெரிய நீர்பரப்புகளாகக் கருதப்படுகின்றன. கிரேக்கன் மேர், இலிகியா மேர், புங்கா மேர் ஆகிய மூன்றும் இவற்றைவிட பெரிய நீர்ப்பரப்புகளாகும். நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [2] சேர்ந்து இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கிரேகன் மேர் நீர்பரப்புக்கு மேற்கில் 73° 336° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் தோராயமாக 240 கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இது காணப்படுகிறது. பூமியில் உள்ள உருசியாவின் ஒனேகா ஏரிக்கு இணையான நீளம் இயிங்போ லாகசு ஏரியின் நீளமாகும். சீனாவிலுள்ள இயிங்போ ஏரியின் நினைவாக இந்த ஏரிக்கு இயிங்போ லாகசு என்று பெயரிடப்பட்டது.

ஒழுங்கு எதிரொளிப்பு[தொகு]

கேசின் விண்வெளி ஆய்வு விண்கலத்தில் இருந்த பார்வை மற்றும் அகச்சிவப்பு வரைபட கதிர்நிரல் அளவி, 71° , 337° மே என்ற அடையாள ஆள்கூறில் இயிங்போ லாகச்சின் 5 µm அகச்சிவப்பு ஒளியை ஒழுங்கு எதிரொளிப்பு ஒளியாக அவதானித்தது. (சில நேரங்களில் இது கிரேக்கன் மேர் தெற்கு கடற்கரையை துல்லியமாக விவரித்தது. எனவே ரேடார் படத்தில் வரையப்பட்ட பெரிய நீர்ப்பரப்பு இருப்பதற்கான கவனிப்பு அனுமானம் உறுதிப்படுத்தப்பட்டது. குளிர்கால 15 ஆண்டுகள் இருளுக்குப் பின்னர் வடதுருவப் பகுதி வெளிப்பட்ட பின்னர் இக்கவனிப்பு மேற்கொள்ளப்பட்டது.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயிங்போ_லாகசு&oldid=2173842" இலிருந்து மீள்விக்கப்பட்டது