உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேக்கன் மேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரேக்கன் மேர் (Kraken Mare) சனியின் நிலவான டைட்டனின் மேற்பரப்பில் அறியப்பட்ட ஒரு பெரிய திரவப் பரப்பாகும். கேசினி விண்வெளி ஆய்வுக்கலம் இதைக் கண்டுபிடித்தது. கிரேக்கன் என்னும் ஒரு பழம்பெரும் கடல் அரக்கன் நினைவாக இப்பரப்பிற்கு 2008 ஆம் ஆண்டில் கிரேக்கன் மேர் என்று பெயரிடப்பட்டது[1].

டைட்டனின் வடதுருவத்தில்[1] 400000 கிலோமீட்டர் 2 பரப்பளவில் [2] இத்திரவப் பரப்பு பரவியிருப்பதாகக் கருதப்படுகிறது. அதிகபட்ச ஆழம் 160 மீட்டர் இருக்கலாம் என்றும், மேலோட்டமான சிற்றலைகள் 1.5 சென்டிமீட்டர் உயரத்திற்கு இருப்பதாகவும் அவற்றின் அதிவேக நகர்வு வினாடிக்கு 0.7 மீட்டர் இருக்கிறது [3] என்றும் கண்டறியப்பட்டுள்ளது. திரவ மீத்தேன் நிரம்பியுள்ள ஒரு கடல் என்று கிரேக்கன் மேர் அடையாளப்படுத்தப்படுகிறது. பூமியில் உள்ள காசுபியன் கடலை விட பெரிய அளவில் கிரேக்கன் மேர் இருப்பதாக கூறப்படுகிறது.

கிரேக்கன் மேர் கடற்பகுதியில் கண்டறியப்பட்ட ஒரு தீவிற்கு மேதா இன்சுலா என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டனின் மேற்பரப்பில் கண்டறியப்பட்ட நீர்ப்பரப்புகளில் இரண்டாவது பெரிய கடலாக கிரேக்கன் மேர் கருதப்படுகிறது. முதலாவது பெரிய கடல்பரப்பு இலிகியா மேர் ஆகும்[4].

கிரேக்கன் மேர் கடற்பகுதியின் 317°மே, 67° என்ற அடையாள ஆள்கூறுகளில் காணப்படும் இந்த இடைகுறுக்கம் 17 கிலோமீட்டர் அகலம் கொண்டு கிப்ரால்டர் நீரிணைப்புக்கு[5] சமமான அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. கிரேக்கனின் தொண்டை என்றழைக்கபடும் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க நீரோட்டங்கள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. [6] டைட்டனின் சுற்றுப்பாதை ஒழுங்கின்மையால் இங்கே 1மீ உயர அலைகளும் 0.5 மீ / வி வேகத்தில் நீரோட்டங்களும் இருக்கலாம் என நம்பப்படுகிறது. நீர்ச்சுழிகளும் இருப்பதற்கான சாத்தியங்களுண்டு எனவும் கூறப்படுகிறது[4].

முன்மொழியப்பட்டுள்ள டைட்டன் சனி பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு விண்வெளி ஆய்வு கலம் கிரேக்கன் மேர் கடலின் மேல் பறந்து அதன் இயைபு, ஆழம் மற்றும் எண்ணற்ற மற்ற பண்புகளை ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kraken Mare". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology Science Center. Retrieved 2012-03-16.
  2. "Titan's Northern Polar Clouds". NASA JPL. March 17, 2011. Text summary. Archived from the original on 2015-09-06. Retrieved 2016-01-23.
  3. Hand, Eric (December 16, 2014). "Spacecraft spots probable waves on Titan’s seas". Science. http://news.sciencemag.org/space/2014/12/spacecraft-spots-probable-waves-titan-s-seas. பார்த்த நாள்: 2015-01-14. 
  4. 4.0 4.1 Lorenz, R. D.(2014). "The Throat of Kraken : Tidal Dissipation and Mixing Timescales in Titan’s Largest Sea". {{{booktitle}}}, 1476. 2014-06-09 அன்று அணுகப்பட்டது.
  5. "Seldon Fretum". USGS planetary nomenclature page. USGS. Retrieved 2015-05-23.
  6. Rincon, P. (2014-03-18). "'Waves' detected on Titan moon's lakes". BBC web site. பிபிசி. Archived from the original on 2014-05-31. Retrieved 2014-06-09.

படக்காட்சியகம்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்கன்_மேர்&oldid=3575124" இலிருந்து மீள்விக்கப்பட்டது