உள்ளடக்கத்துக்குச் செல்

இம்பூறல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்பூறல்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Rubiaceae
பேரினம்:
Oldenlandia
இனம்:
O. umbellata
இருசொற் பெயரீடு
Oldenlandia umbellata
L.

இம்பூறல் அல்லது சாயவேர் அல்லது சிறுவேர் அல்லது இன்புறாவேர் (chay root அல்லது choy root; Oldenlandia umbellata) என்பது இந்தியாவை தாயகமாகக் கொண்ட ஓர் குறை வளர்ச்சித் தாவரமாகும்.[1] இரண்டு வருடத் தாவரத்தின் வேர்த் தோலிலிருந்து சிவப்பு சயத்தை எடுக்க முடியும். முன்னர், இதன் வேர்ச் சாயம் சாயமூன்றியுடன் சேர்க்கப்பட்டு பருத்தி, கம்பளி, பட்டு ஆகியவற்றின் சிவப்பு நிற வேலைப்பாடுகளில் பாவிக்கப்பட்டது.[2] இது மூலிகையாகவும் பயன்படுகிறது. இத்தாவரம் இந்தியாவின் கோரமண்டல் கரைகளில் வளர்கிறது.

விளக்கம்

[தொகு]

இம்பூறலானது மொட்டு அளவில் சிறு மலர்களைக் கொண்ட சின்னஞ் சிறு தாவரம் ஆகும். இது ஈட்டி வடிவச் சிறு இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் கொண்டிருக்கும். இதில் குயினோன்கள் (Quinones), அலிசாரின் (Alizarin) போன்ற தாவரவேதிப் பொருட்கள் உள்ளன.[3]

உசாத்துணை

[தொகு]
  1. "chay root". thefreedictionary. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
  2. "The in vitro antibacterial activity of Hedyotis Umbellata – Short Communication". Indian Journal of Pharmacological Sciences. பார்க்கப்பட்ட நாள் 2007-01-15.
  3. டாக்டர் வி.விக்ரம் குமார் (26 சனவரி 2019). "இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 27 சனவரி 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இம்பூறல்&oldid=3576630" இலிருந்து மீள்விக்கப்பட்டது