இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இனப்படுகொலையை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide) என்பது இனப்படுகொலையை வரையறை செய்து, தடைசெய்யும் உடன்படிக்கை ஆகும். இப்போது 137 நாடுகளில் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். இதில் பங்கு பெற்று சகல நாடுகளும் இன ஒழிப்பைத் தவிர்க்கவும், யுத்த காலத்திலும் சமாதான காலத்திலும் இவற்றைத் தண்டிக்கவும் வேண்டுமென இந்த ஒப்பந்தம 1951 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது.

இனப்படுகொலை வரையறை[தொகு]

இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 2ஆம் கட்டுரையின் படி:

...ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்:

(அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்;
(ஆ)இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்;
(இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல்
(ஈ) குழுவினர் அல்லது இனத்தினர் குழந்தை பெற்று கொள்வதைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்தல்;
(உ) வலுகட்டாயமாக இனத்தின் குழந்தைகளை மற்றொரு இனத்திற்கு மாற்றுதல்.

இனப்படுகொலை குற்றத்தைத் தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை, கட்டுரை 2[1]

இனப்படுகொலையைத் தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 3ஆம் கட்டுரையின் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்கள்:

(அ) இனப்படுகொலை;
(ஆ)இனப்படுகொலை செய்ய சதி செய்தல்;
(இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் மற்றும் வெளிப்படையாகவும் தூண்டுதல்;
(ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்
(உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல்.

இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை, கட்டுரை 3[1]

இந்த உடன்படிக்கை இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனி படைகளின் படுகொலைகள் போன்றவற்றைத் தடை செய்யவும் எதிர்காலத்தில் வராமல் தடுக்கவும் நிறைவேற்றப்பட்டது.

பங்குகொண்டுள்ளவர்கள்[தொகு]

தொகுப்பு இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையில் பங்கு கொண்டுள்ளவர்கள்
  Signed and ratified
  Acceded or succeeded
  Only signed

மீறல்கள்[தொகு]

ரூவாண்டா[தொகு]

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ரூவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு 100 நாட்களுக்குள் எட்டு லட்சம் டுட்சி இனத்தவர்களையும், ஹுட்டுஸ் இனம் ஹுட்டுஸ் இன முற்போக்குவாதிகளையும் இனப்படுகொலை செய்துள்ளனர்.[2]. இந்தச் சட்டம் முதன் முறையாக 1998ஆம் வருடம் ருவாண்டா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஜீன் பால் அகேயசு என்ற ரூவாண்டாவில் உள்ள நகரத்தின் மேயர் 9 பேரை இனப்படுகொலை செய்தாக கண்டறிந்தது. இரண்டு நாள் கழித்து முதன் முறையாக ஜீன் கம்பண்டா என்ற ரூவாண்டா நாட்டு தலைவர் தண்டனை பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Text of the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, website of the UNHCHR.
  2. See, e.g., Rwanda: How the genocide happened, பிபிசி, April 1, 2004, which gives an estimate of 800,000, and OAU sets inquiry into Rwanda genocide, Africa Recovery, Vol. 12 1#1 (August 1998), p. 4, which estimates the number at between 500,000 and 1,000,000. Seven out of every 10 Tutsis were killed.